காய்கறி பயிர்களுக்கு மூடாக்கு

விவசாயிகள் காய்கறி பயிர்களுக்கு மூடாக்கு அமைப்பதன் மூலம், குறைந்த நீர் பாசனம், குறைந்த களை உள்ளிட்ட பல நன்மைகளை அடையலாம் .
பொள்ளாச்சி பகுதிகளில், மழையின்மை காரணமாக தென்னை விவசாயம் தொய்வடைந்து காணப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளாக நிலவிய பாசனப்பற்றாக்குறை, தேங்காய் விலை வீழ்ச்சி ஆகிய காரணங்களால், விவசாயிகள் மாற்றுப்பயிர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர்.
அதில், குறுகிய காலப்பயிர்களான, காய்கறி பயிர்கள் விவசாயிகளை அதிகம் கவர்ந்துள்ளது. இருக்கும் குறைந்த நீரைக்கொண்டு பாசனம் செய்து, அதிக மகசூல்; லாபம் அடையும் வழி
முறைகளை விவசாயிகள் கையாளத்துவங்கியுள்ளனர்.
சொட்டு நீர்பாசன முறையில் பாசனம் செய்தல், அதில் நீர் வழி உரங்களை கலந்து பயிர்களுக்கு தருதல், வளர்ச்சி ஊக்கிகளை பயன்
படுத்துதல் ஆகிய வழிமுறைகளை பெரும்பாலான விவசாயிகள் கையாள்கின்றனர்.

இதில், சொட்டு நீர் பாசனம் அமைக்க, அரசு மானியம் அளித்து வருகிறது.

  • பயிர்களுக்கு பாசனம் செய்யும் நீரின் பெரும் பகுதி, காற்றில் ஆவியாவதால், நீர் விரையமாகிறது.
  • மேலும், பயிர்களின் அடியில், தேவையற்ற களைகள் முளைத்து, பயிருக்கு கொடுக்கப்படும் உரம் மற்றும் பாசனத்தை பெருமளவு உறிஞ்சுவதால், பயிர்களுக்கு பற்றாக்குறை ஏற்படுகிறது.
  • இதைத்தடுக்க, செடிகளின் வேர்பகுதிகளில், செயற்கை மூடாக்கு அமைக்கலாம்.
  • இதற்கான பாலித்தீன் ஷீட்டுகள், கடைகளில் விற்கப்படுகின்றன.
  • மூடாக்கு அமைப்பதால், நீர் ஆவியாதல் பெருமளவு தடுக்கப்படுகிறது.
  • எனவே, குறைந்த அளவு பாசனம் செய்தால் போதுமானது.
  • மேலும், பயிர்களின் அடியில் களைகள் வளர்வதும் தடுக்கப்படுகிறது.
  • இதனால், களை எடுக்கும் செலவும் மிச்சமாகிறது.
  • பயிருக்குமண்ணிலிருந்து முழுமையான சத்துகள் கிடைக்கும்.
  • கொடுக்கும் உரங்களும் வீணாகாது.எனவே, உரச்செலவும் குறையும்.
  • இப்படி பல வகையில் நன்மைகள் தரும் மூடாக்கு அமைக்கும் தொழில்நுட்பத்தை, அனைத்து விவசாயிகளும் அமைத்து பயன்பெறலாம்

யாரை அணுகுவது?

  • காய்கறி பயிர்களுக்கு மூடாக்கு அமைக்க, தோட்ட கலை துறையின் மூலம், 50 சதவீதம் வரை மானியம் அளிக்கப்படுகிறது.
  • மானியம் வேண்டும் விவசாயிகள், சிட்டா, ரேஷன்கார்டு, 3 புகைப்படங்கள் மற்றும் மூடாக்கு வாங்கியதற்கான ரசீது ஆகியவற்றுடன் தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை அணுகலாம்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *