சொட்டுநீர் பாசன முறையை கையாண்ட முருங்கை தோட்டத்தில் மகசூல் மும்மடங்கு பெருகியுள்ளது.
கடந்த ஓராண்டிற்கு முன்பு வரை வாடிப்பட்டி பகுதியில் பயிரிடப் பட்டுள்ள முருங்கை மரங்கள் இயல்பான முறையில் நீர் பாய்ச்சி, உரமிட்டு,நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. அப்போது ஒரு ஏக்கரில் பயிரிடப்பட்ட 120 மரங்களில் மரம் ஒன்றிற்கு அதிகபட்சமாக 10கிலோ மகசூல் கிடைத்தது. மகசூல் குறைந்ததற்கு காரணம் பாசனநீர் மற்றும் உரம் ஆகியவை பெருமளவு வீண் ஆனதே காரணம்.
தற்போது சொட்டுநீர் பாசன முறை அறிமுகப்படுத்தப்பட்டதால் மகசூல் பலமடங்கு அதிகரித்துள்ளது. அதற்கு காரணம் மரங்களுக்கு தேவையான நேரத்தில், தேவைக்கேற்ப நீர் மற்றும் உரம் ஆகியவை கிடைப்பதால் மரம் ஒன்றுக்கு சராசரியாக 30 கிலோ மகசூல் கிடைக்கிறது.அதனால் விவசாயி கூடுதல் வருமானம் பெற வாய்ப்பாகிறது.
மேலும் ஆண்டுக்கு இருமுறை மட்டுமே மகசூல் பெற்று வந்த விவசாயிகள் சொட்டுநீர் பாசனம் மூலம் விவசாயத்தை மேற்கொள்ளும் போது ஆண்டுக்கு மூன்று முறை மகசூல் பெறவும் வாய்ப்புள்ளது. இதை அமைக்க அரசு மானியம் வழங்குகிறது.
நன்றி: erodelive
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்