சொட்டு நீர் பாசனம் நன்மைகள்

குறைந்த அளவு தண்ணீரைக் கொண்டு கூடுதல் மகசூல் பெற சொட்டு நீர்ப்பாசனம் முறையை பயன்படுத்த விவசாயிகள் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.

 •  பெரும்பாலான காய்கறிகள் மற்றும் பழப்பயிர்களின் நீர் மற்றும் சத்துகளை உறிஞ்சும் செயல்திறன் மிக்க வேர்கள் மண்ணின் மேல்மட்டத்திலிருந்து ஒரு அடி ஆழத்தில் உள்ளது.
 • நீர்பாசனம் செய்யும் போது மண் ணின் மேற்பரப்பு ஈரமாகவும், சத்துகள் உள்ளவாறும் பராமரித்தால் பயிர்கள் நன்கு வளர்ச்சி அடையும்.
 • சொட்டு நீர் பாசனத்தின் மூலம் தேவைப்படும் இடம் மற்றும் போதுமான அளவில் மண்ணின் மேற்பரப்பு ஈரமாக்கப்படுவதுடன் பயிருக்கு தேவைப்படும் சத்துகளை பயிர் களின் செயல்திறன் மிக்க வேர்கள் உள்ள இடத்திலேயே கிடைக்கிறது.
 • இம்முறையினால் தண்ணீர் சிக்கனம், களை கட்டுப்பாடும் ஏற்பட்டு கூடுதல் மகசூல் கிடைக்கிறது.
 • சொட் டுநீர் பாசனத்தை பயன்படுத்தி கோலி யனூர் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த பிடாகம் பகுதியில் விவசாயி ராஜா  இரண்டரை ஏக்கர் பரப்பளவில் உஜாலா மற்றும் முள் கத்தரி பயிர் செய்துள்ளார்.
 • அதே பகுதியில் விவசாயி ஜோதி பிரகாசம் என்பவர் ஒரு ஏக்கர் பரப்பளவில் சொட்டுநீர் பாசனம் மூலம் வெண்டை சாகுபடி செய்துள்ளனர்.
 • ஒரு ஏக்கருக்கு தேவைப்படும் தண்ணீரைக் கொண்டு சொட்டு நீர் பாசனம் மூலம் இரண்டரை ஏக்கர் வரை சாகுபடி செய்யலாம்.
 • வாய்க் கால் மூலம் தண்ணீர் பாய்ச்சினால் 40 சதவீதம் வரை நீர் இழப்பினை தடுக்கலாம்.
 • சொட்டு நீர் பாசனம் செய்வதன் மூலம் பயிரின் வேர்களைச் சுற்றியும் 60 சதவீதம் ஈரப்பதமும், 40 சதவீதம் காற்றோட்டமும் நிலை நிறுத் தப்பட்டு பயிரின் வேருக்கு அருகில் உரம் மற்றும் நீர் கிடைப்பதால், பயிரின் வேர் மற்றும் தழை வளர்ச்சி கூடுதலாகி மகசூலும் அதிகளவில் கிடைக்கிறது.
 • இதனால் பயிர்களில் பூச்சி மற்றும் நோய் தாக்கும் அளவும் குறைவாக உள்ளது.
 • சொட்டுநீர் பாசனத்தின் மூலம்  மா, கொய்யா, சப்போட்டா, மாதுளை வாழை, எலுமிச்சை, பப் பாளி, கத் தரி, வெண்டை, தக்காளி, மிள காய் மற்றும் பூசணி வகைகள் பயிர் செய்யலாம்.
 • மேலும் இதற்கான உரங்கள் மற்றும் பூச்சி மருந்துகளும் சொட்டு நீர் பாசனக் குழாய்கள் மூலமே செலுத்தப்படுவதால் செடிகளின் வேர்ப்பகுதியில் அவைகள் சென்று சேருகின்றன.
 • இதனால் உரம் மற்றும் பூச்சி மருந்து செலவுகளும் குறைக் கப்படுகின்றன.
 • மேலும் சொட்டு நீர் பாசனம் அமைக்க தோட் டக்கலை துறை மூலம் 65 சதவீதம் மான்ய விலையில் பாசனக் கருவிகள் பெற்று விவசாயிகள் பயன் பெறலாம்

இவ்வாறு தோட்டக்கலை துணை இயக் குனர் பன்னீர்செல்வம், கோலியனூர் தோட்டக்கலை உதவி இயக்குனர் வீராசாமி ஆகியோர் கூறினார்

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *