டீஸல் விலை நாள் ஏறிக்கொண்டே ,போகும் போது பாசனத்திற்கு டீஸல் பதிலாக புன்னை எண்ணை பயன் படுத்தி சாதனை செய்துள்ள ஒருவரை சந்திப்போமா?
![courtesy: The Hindu](http://gttaagri.relier.in/wp-content/uploads/2014/03/punnai.jpg)
நாகை மாவட்டத்தில் உள்ள வேட்டைக்காரன் இருப்பு என்ற ஊரில் உள்ள ராஜசேகரன் என்ற விவசாயி தன்னுடைய 5 ஏகர் நிலத்தில் பாசனத்திற்கு புன்னை எண்ணை மூலம் நீர் பம்ப் செய்கிறார்.
இவரின் நிலம் சுனாமி வந்த போது கேட்டு விட்டது. இப்போது 35 விதமான பழ மரங்கள் இருக்கின்றன. கொய்யா, மா,எலுமிச்சை, தேக்கு, பல போன்றவை நன்கு வளர்கின்றன.
முழுக்க முழுக்க இயற்கை வேளாண் முறைகளால் தரிசு நிலத்தை சரி செய்துள்ளார் இவர்.
இவரின் தோட்டத்தில் இரண்டு புன்னை மரங்கள் உள்ளன. அவர் கூறுகிறார்:
- “இரண்டு புன்னை மரங்கள் இருந்தால் ஒரு டீஸல் பம்ப் இயக்கலாம். இந்த மரங்களின் இலைகளை ஆடு மாடுகள் தின்பதில்லை. எளிதாக எந்த விதமான மண் நிலங்களிலும் வளர்கின்றன.
- ஐந்து வருடம் கழித்து பழம் கொடுக்கின்றன. ஐந்து வயதுள்ள மரத்தில் இருந்து 20 கிலோ வரை கொட்டைகள் கிடைக்கும். 10 வருடம் கழித்து ஒரு மரம் 10-60 கிலோ வரை கொடுக்கும். வயது அதிகரிக்க 500 கிலோ வரை கொடுக்கும்
- இந்த மரத்தின் பழத்திற்கு வௌவால்கள் வருகின்றன. இரவு பழங்களை தின்று விட்டு கொட்டைகளை போட்டு செல்கின்றன.
- நான் தினமும் காலை மரத்தின் கீழே கிடக்கும் கொட்டைகளை சேர்த்து வெயில்லில் ஒரு வாரம் காய வைப்பேன். பிறகு அவற்றை உடைத்து மீண்டும் 10 நாட்கள் வெய்யிலில் காய வைப்பேன்
- இவற்றின் இருந்து 1 கிலோ கோட்டை 800 மிலி எண்ணை கிடைக்கும். ஒரு லிட்டர் எண்ணை தயாரிக்க எனக்கு ரூ 10 செலவு ஆகிறது.
- ஒரு வருடத்தில் எனக்கு இந்த 2 மரங்கள் மூலம் 75 லிட்டர் எண்ணை கிடைக்கிறது”
இந்த எண்ணை எப்படி செயல் படுகிறது?
- “நான் 5hp டீஸல் பம்ப் வைத்து பாசனம் செய்கிறேன்.
- டீஸல் பதில் புன்னை எண்ணை பயன் படுத்தினால் ஒரு மாற்றமும் தெரிய வில்லை.
- இரண்டும் ஒரே அளவு நீரை பம்ப் செய்கின்றன. பம்பில் துரு பிடிபதில்லை.
- மேலும் பம்பில் இருந்து கொஞ்சமாக தான் புகை வருகிறது ” என்கிறார் அவர்
அது மட்டும் அல்ல – எண்ணெய் எடுத்த பின் கிடைககும் சக்கை எருவாக பயன் படுகிறது.
மீதி இருக்கும் எண்ணெயை ஒரு லிட்டர் 42 வரை விற்பனை செய்து லாபமும் ஈட்டுகிறார்
இந்த மரங்களை வளர்தால், 5 வருடங்களில் விவசாயிகள் தங்களின் டீஸல் செலவை குறைத்து லாபம் அடையலாம் என்கிறர் அவர்
இவரை தொடர்பு கொள்ள:
திரு C ராஜசேகரன், கண்டியன் காடு, வேட்டைக்காரன் நிறுப்பு பஞ்சாயத்து, கிவலூர் தாலுகா, நாகை மாவட்டம்
அலைபேசி: 09751002370
நன்றி: ஹிந்து
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
One thought on “டீசலின் செலவை குறைக்க புன்னை எண்ணை”