டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகையில் வந்த ஒரு செய்தியின் தமிழாக்கம் இதோ.
1 இந்தியாவில் உள்ள 62 மில்லியன் ஹெக்டரில், 60 % நிலநீர் மூலம் பாசனம் படுகின்றன. கால்வைகலாலோ, பெரிய பாசன திட்டங்கள் மூலமோ இல்லை. இது, இந்தியாவின் பசுமை புரட்சி மாநிலங்களான பஞ்சாப், ஹர்யானா, UP ஆகியவற்றுக்கும் பொருந்தும். எத்தனையோ அணைகள் கட்டி, எத்தனையோ கால்வாய்கள் கட்டி சுதந்திரம் வந்து 60 வருடம் பின்பு இந்தநிலை.
2 . 1991 முதல் 2007 வரை அரசாங்கம் 1 .3 லட்சம் கோடி ரூபாய் அளவு, பெரிய மற்றும் சிறிய பாசன திட்டங்களுக்காக செலவு செய்து இருக்கிறது. ஆனால் இந்த 16 வருடங்களில், இத்தனை செலவு செய்து, பாசனம் செய்யப்பட்ட ஏரியா அதிகரிக்கவே இல்லை!
3. உண்மையை சொல்ல போனால், இதனை செலவு செய்த பின், பாசனம் உள்ள பரப்பு 1991 இல், 17791000 ஹெக்டரிளிருந்து, 2008 இல், 16531000 ஹெக்டருக்கு குறைந்து இருக்கிறது!
4. உலக வங்கி 2005 இல் சொல்ல பட்ட ஒரு அறிக்கையில், இந்தியாவில் உள்ள கால்வாய்கள் பராமரிக்க மட்டும் ரூபாய் 17000 கோடி வேண்டும் என்கிறது. ஆனால், நம் மாண்புமிகு நிதி அமைச்சரோ, இதில் 10 % கூடகொடுப்பதில்லை!
ஆக ஒரு பக்கம், கோடி கோடியாக பணம் “செலவு” செய்ய படுகிறது. இன்னொரு பாகம், இருக்கும் கால்வாய்கள் மராமத்து இல்லாமல் கெட்டு போகின்றன. இந்த கோடிகளில் எத்தனை கோடிகள் அரசியல்வாதிகள், அதிகாரிகள், கன்றக்டோர்ஸ் சாப்பிடார்களோ? கடவுளுக்கே வெளிச்சம்.
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்