சத்தியமங்கலம் பகுதியில் வாழை வயலில் நடப்பட்டுள்ள பூசணி, தற்போது அறுவடையாகி வருகிறது.
- சத்தியமங்கலம் பகுதியில் விவசாயிகள், பத்தாயிரம் ஏக்கருக்கு மேல் வாழை பயிரிட்டுள்ளனர். இதில் செவ்வாழை மற்றும் கதளி ஆகிய ரக வாழைகளுக்கு முக்கியதுவம் கொடுக்கப்படுகிறது.
- இந்த ரகவாழைகள் ஏக்கர் ஒன்றுக்கு செவ்வாழை, 800 வாழை கன்றுகளும், கதளி ஏக்கர் ஒன்றுக்கு, 1,200 வாழை கன்றுகளும் நடப்படுகிறது.
- ஒவ்வொரு வாழை கன்றுகளுக்கு இடையே செவ்வாழை எட்டு அடி இடைவெளியும், கதளி ரகத்திற்கு ஆறு அடி இடைவெளியும் விடப்படுகிறது.
- இந்த இடைவெளியில் புற்கள் முளைத்து விடுகிறது. இந்த புற்களை அகற்றவே வாழை விவசாயிகள் அதிகமாக செலவு செய்ய வேண்டியுள்ளது.இந்த இடைவெளியில் புற்கள் முளைக்கப்படுவதை தடுக்க களைக்கொள்ளி மருந்தும் தெளிக்கின்றனர்
- ஆனால் தற்போது விவசாயிகள் இந்த இடைவெளியில் ஊடுபயிர் நடவு செய்து, இதில் கூடுதலாக மற்றொரு வருமானத்தை பெருக்கி வருகின்றனர்.
- இதில் தற்போது நல்ல வருமானம் தரும் ஊடுபயிர் பூசணி ஆகும். வாழை கன்று நடவு செய்யப்பட்ட பின் பத்து மாதங்கள் கழித்து பலன் கொடுக்கிறது.
- இதற்குள் இயற்கை சீற்றமாக சூறாவளி காற்று வந்தால் வாழை விவசாயிகள் கதி மோசமாகிவிடும் என்பது குறிப்பிடதக்கது.
- ஆனால் இதன் இடைவெளியில் பயிரிடப்படும் பூசணி பயிர் நடவு செய்யப்பட்ட நாளில் இருந்து, 80 வது நாளில் இருந்து பலன் கொடுக்கிறது.
- தற்போது சத்தியமங்கலம் பகுதியில் வாழை வயலில் ஊடுபயிராக நடவு செய்யப்பட்ட பூசணி அறுவடையாகி வருகிறது. ஏக்கர் ஒன்றுக்கு, 20 டன் முதல், 30 டன் வரை ஊடுபயிரான பூசணி விளைச்சல் கொடுக்கிறது
- பூசணி செடி படர்ந்து வளர்வதால் வாழை வயலில் புற்கள் முளைப்பதில்லை.
- ஊடுபயிரான பூசணி காய் பிடித்த காலத்தில் இருந்து மூன்று மாதங்கள் வரை பலன்கொடுக்கிறது.
- மண் வளம் குறைவாக இருந்தால், பலன் கொடுப்பது இரண்டு மாதங்களாக குறையும்.
- இது குறித்து வாழை விவசாயிகள் கூறும்போது, ஊடுபயிராக பூசணி பயிரிடுவதால் பெரும்பலான வாழையின் பராமரிப்பு செலவு குறைகிறது.
பூசணி விலை அதிகரித்தால் வாழைக்கு மேல் விவசாயிகளுக்கு பூசணியில் லாபம் கிடைக்கும், என்றனர்.
நன்றி: யாஹூ/தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்