உயிரியல் கொல்லிகள் குறித்த இலவசப் பயிற்சி

பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தில், உயிரியல் கொல்லிகள் குறித்த இலவச பயிற்சி வகுப்பு 2013 டிச. 17-ம் தேதி நடைபெற உள்ளது என்றார் மைய திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர். பி. வெங்கடேசன்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

  • தற்போது சாகுபடி செய்யும் பயிர்களில் பூச்சிகள், நோய்கள், தாவர நூற்புழுக்கள் ஆகியவை அதிகமாக தாக்கி, பயிரின் வளர்ச்சி குன்றி மகசூல் இழப்பு ஏற்படுகின்றது.
  • இதைக் கட்டுப்படுத்த, விவசாயிகள் ரசாயன பூச்சிக் கொல்லிகளை அதிகளவில் பயன்படுத்துகின்றனர். இதனால், புதிய வகை பூச்சிகளும், நோய்களும் தோன்றி, பயிருக்கு நன்மை தரக்கூடிய பூச்சிகளை அழிக்கின்றன.
  • இதன்மூலம், சுற்றுப்புற சூழல் பாதிக்கப்படுவதோடு உணவில் விஷத்தன்மை ஏற்பட்டு, தீமை செய்யும் பூச்சிகளுக்கு எதிர்ப்புத் திறன் உண்டாக்குகிறது. ரசாயன பூச்சிக்கொல்லிகள் நன்மை செய்வதை விட, அதிகளவு தீமை செய்கிறது.
  • எனவே, உயிரியல் கொல்லிகளை பயன்படுத்தி, பயிர்களை தாக்கும் பூச்சிகள் மற்றும் நோய்களை கட்டுப்படுத்தி பயிர் சாகுபடி செய்வது குறித்த தொழில் நுட்பங்கள் குறித்து, விவசாயிகளுக்கு காணொளி காட்சி மூலம் விளக்கம் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • இப்பயிற்சி வேளாண் அறிவியல் மையத்தில் 2013 டிச. 17-ம் தேதி காலை 10 மணி முதல் 3 மணி வரை நடைபெற உள்ளது.
  • இதில் கலந்து கொள்ள ஆர்வமுள்ள விவசாயிகள், ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தை 04328293592, அல்லது பயிர் பாதுகாப்பு தொழில் நுட்ப வல்லுநரை 09787620754 என்ற தொலைபேசி எண்களில் காலை 9.30 முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து பயன்பெறலாம்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *