கெடுதல் செய்யும் பூச்சிகளை அழிக்க உதவும் சோலார் விளக்குப் பொறி குறித்து விளக்கும், புதுவை சாப்ஸ் வேளாண் நிறுவனர் அப்துல்காதர் கூறுகிறார்:
வயலில் உள்ள பூச்சிகளை அழிப்பதற்காக, ரசாயனமருந்துகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாகக் கண்டறிந்த முறை தான், இந்த சோலார் விளக்குப் பொறி.சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் உருவாக்கப்பட்டுள்ள இக்கருவி
இயற்கைமுறையில் பூச்சிகளை கட்டுப்படுத்துகிறது. முற்றிலும் சூரிய ஒளியில், தானியங்கி முறையில்இந்த சோலார் விளக்குப் பொறியை வடிவமைத்து உள்ளோம்.அதிலும், தீமை செய்யும் பூச்சிகளை மட்டும் அழிக்கக் கூடியதாக இருக்க வேண்டும்என்பதற்காக, அவை முழுத் திறனுடன் பயிர்களை அழிக்கும் நேரத்தைத் தெரிந்து, அதற்கேற்ப, சோலார் விளக்குப் பொறி வடிவமைக்கப்பட்டுஉள்ளது.
பூச்சியியல் நிபுணர் முனைவர் வைத்தியலிங்கத்தின் உதவியுடன், சூரியன் மறைகிற நேரம்முதல், தொடர்ச்சியாக நான்கு மணி நேரம் செயல்படும் வகையில், மைக்ரோ கண்ட்ரோல் போர்டுமூலம் வடிவமைத்தோம்.
இதில் சூரிய சக்தியை சேமிக்க பேட்டரிகள் உள்ளன.இந்த சோலார் விளக்குப் பொறியை தோட்டப் பயிர்கள், காய்கறிப் பயிர்கள், நெல், எண்ணெய் வித்துப்பயிர்கள், மலைத் தோட்டப் பயிர்கள் என, அனைத்திற்கும் பயன்படுத்தலாம்.
தேவையானஇடத்திற்கு, இக்கருவியை எளிதில் மாற்றலாம்.தாய் அந்திப் பூச்சிகள், காய் துளைப்பான், பழம் துளைப்பான், சாறு உறிஞ்சும் பூச்சி, வெள்ளை ஈ,வண்டுகள் முதலியவற்றை, இந்த விளக்குப் பொறியின் மூலம் கட்டுப்படுத்தலாம்.இக்கருவியில், 85 சதவீதம் தீமை செய்யும் பூச்சிகளே விழுகின்றன. நன்மை செய்யும் பூச்சிகள்,விடியற்காலையில் அதிகம் வரும்.
ஒரு ஏக்கர் பரப்பளவில் உள்ள பூச்சிகளை, இந்த விளக்குப் பொறியின் மூலம் கட்டுப்படுத்தலாம்.
தற்போது விவசாயிகளுக்கு இக்கருவியை, 2,625 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறோம்.இதே தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு, மின்சார பேட்டரியின் மூலம்செயல்படக்கூடிய விளக்குப் பொறியையும் உருவாக்கி, தற்போது, 1,800 ரூபாய்க்கு விற்பனைசெய்து வருகிறோம். தொடர்புக்கு: 09488591915
இந்த வகை பொறிகளை பயன் படுத்துவதால் ரசாயன பூச்சி கொல்லிகள் உபயோகம் குறைக்க படலாம்.நச்சு குறைந்த காய்கறி பயிர்கள் கிடைக்கும்!
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்