“பெருகி வரும் பூச்சிக்கொல்லி மருந்து பயன்பாடு காரணமாக, வாரம் ஒரு பறவையினம் அழிந்து வருகிறது,’ என கானுயிர் வார விழாவில் கவலை தெரிவிக்கப்பட்டது.
பெட்டட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உலக கானுயிர் வாரத்தை முன்னிட்டு சிறப்பு கருத்துரங்கு நடந்தது. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட செயலாளர் ஆசிரியர் ராஜூ சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசுகையில்,”
- ஒரு புலி வாழ 25 சதுர கி.மீ., வனப்பகுதி தேவை.
அத்தகைய ஒரு காட்டில் அனைத்து உயிரினங்களும் வாழும். மேலும் அங்கு நிதி உற்பத்தியாகும்.எனவே தான் புலியை பல்லூயிரின விலங்கு என அழைக்கின்றனர். - யானை தன் கழிவு மூலம் 16 தாவர இனங்கள் தழைக்க உதவுகிறது.
- ஒவ்வொரு பாம்பும் ஒரு நாளைக்கு ஆறு எலிகளை சாப்பிட்டு நம் உணவு தானியத்தை காக்கிறது.
- ஒரு ஆந்தை ஒரு இரவில் 32 எலிகளை சாப்பிட்டு அதன் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்துகிறது.
உலகில் 8,300 வகையான பறவையினங்கள் உள்ளன. பெருகி வரும் பூச்சிக்கொல்லி மருந்து பயன்பாடு காரணமாக வாரம் ஒரு பறவையினம் அழிந்து வருகிறது,” என்றனர்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்