மஞ்சள் கிழங்கில் அழுகல் நோய் தடுப்பது எப்படி?

மஞ்சள் கிழங்கில் அழுகல் நோய் தாக்குதல் பரவலாக காணப்படுகிறது. மஞ்சள் பயிரில் பல பூசான நோய்கள் தாக்கி பெரும் சேதத்தை விளைவிக்கின்றன. கிழங்கு அழுகல் நோய் மஞ்சள் சாகுபடி செய்யும் எல்லாப்பகுதியிலும் இழைப்பை ஏற்படுத்துகிறது.

அறிகுறிகள்

 • இந்நோய் தாக்குதலின் அறிகுறியாக, பாதிக்கப்பட்டு பயிரின் இலை ஓரங்கள் முதலில் சிறிது சிறிதாக காய்ந்து பின் முழுமையாக காய்ந்துவிடும்.
 • தண்டுப்பகுதியின் அடிப்பாகம் நீர் கோர்த்து மென்மையாக காணப்படும்.
 • வேர்ப்பகுதி மிகவும் குறைந்து அதன் திசுக்கள் பாதிக்கப்பட்டிருக்கும்.
 • நோய் முதிர்ந்த நிலையில் கிழங்கில் நோய் தாக்கப்பட்டு அழுகிய திசுக்களாக மாறிவிடும்.
 • பயிர் ஆரஞ்சு நிறத்தில் உள்ள கிழங்கு பழுப்பு நிறமாக மாறுவதுடன் கிழங்கு உருவாவதும் பாதிக்கப்படுவதால் விளைச்சல் முழுவதுமாக குறைந்துவிடும்.

தடுக்கும் முறைகள்

 • அதை கட்டுப்படுத்த, பயிர் சுழற்சி முறை கடைபிடிக்க வேண்டும்.
 • சிறந்த வடிகால் வசதியுள்ள நிலங்களையே தேர்வு செய்ய வேண்டும்.
 • நோய் தாக்குதல் இல்லாத விதை கிழங்குகளையே விதைப்புக்கு பயன்படுத்த வேண்டும்.
 • விதை கிழங்கை 0.3 சதவீதம் காப்பர் ஆக்ஸிகுளோரைடு கரைசலில் விதை நேர்த்தி செய்து நிழலில் உலர்த்திய பின் விதைக்க வேண்டும்.
 • வயலில் கிழங்கு அழுகல் நோய்க்கான ஆரம்ப அறிகுறிகளை பார்த்துடன் மென்கோ செப் 0.5 சதவீதம் அல்லது காப்பர் ஆக்ஸிகுளோரைடு 0.25 சதம் கரைசலை வேர்ப்பகுதியில் ஊற்ற வேண்டும்.
 • நோய் தாக்கிய பயிருக்கு அருகில் உள்ள ஆரோக்கியமான பயிரின் வேர்ப்பகுதியிலும் பூசானக்கொல்லி கரைசலை ஊற்ற வேண்டும்.
 • விதைப்புக்கு முன் வேப்பம் புண்ணாக்கு 80 கிலோ என்ற அளவு 4 டன் தொழு உரத்துடன் சேர்த்து வயலில் இடவேண்டும்.

இவ்வாறு நாமக்கல் உழவர் பயிற்சி நிலைய வேளாண் துணை இயக்குனர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *