வறட்சியில் வளம் தரும் மரங்கள்

அகர் மரத்தின் மையப்பகுதியில் சந்தன மரத்தில் இருப்பதுபோல வாசனை மிகுந்த வைரப்பகுதி உருவாகும். இந்த வைரப்பகுதியை அரைத்து அகர் எண்ணெய் எடுக்கப்படுகிறது. இம்மரங்களை தென்னை, பாக்கு, மா, மலைவேம்பு, சந்தனம், சவுக்கு மற்றும் பல வகையான தோப்புகளிலும் கலந்து பயிர் செய்யலாம். பத்து ஆண்டுகள் வளர்ந்த ஒரு அகர் மரம் ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யலாம்.
சந்தன மரங்கள் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் வளர்க்க சுதந்திரம் உண்டு. அறுவடை செய்திட வனத்துறையின் அனுமதி பெற வேண்டும். வறண்ட பாறை நிலங்களில் கூட வளமுடன் வளர்ந்து பலகோடி ரூபாய் அன்னிய செலாவணியை ஈட்டித் தரும் தெய்வீக மரமாகும். வீடுகள், தோட்டங்கள், பள்ளி, கல்லூரி, தொழிற்சாலை வளாகங்களிலும் அதிக பராமரிப்பு இன்றி வளர்க்கலாம். வளர்க்க அனுமதி பெற வேண்டியது இல்லை. அச்ச மின்றி வளர்க்கலாம். ஏக்கருக்கு 450 மரங்கள் வளர்க்கலாம். பதினைந்து ஆண்டுகளில் அறுவடை செய்யலாம். ஒரு சந்தன மரம் ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யலாம்.

மலைவேம்பு, குமிழ்தேக்கு, ஆஸ்திரேலியாவின் தேக்கு ஆகிய மரங்கள் வேகமாகவும் உயரமாகவும் வளர்ந்து பயன்தரக் கூடியவை. ஐந்து அடி இடைவெளி யில் சந்தனம் உள்ளிட்ட அனைத்துவகை மரங்களையும் நடவு செய்யலாம். ஏக்கருக்கு 900 மரங்கள் வளர்க்கலாம்.

மேல் குறிப்பிட்ட அகர், சந்தனம், மலைவேம்பு, குமிழ்தேக்கு, ஆஸ்திரேலியாவின் தேக்கு, தென்னை, மா, சப்போட்டா, நெல்லி, பேரிச்சை மற்றும் பல வகையான மரங்களை தேவையான இடைவெளியில் கலந்து நடவு செய்தபின் வாழை, மஞ்சள், வெங்காயம், கத்தரி, மிளகாய், தக்காளி போன்ற காய்கறி பயிர்களையும், வேலிமசால் மற்றும் தீவனப்புல் வகைகள் என தேவையானவற்றை ஊடுபயிர் செய்வதன்மூலம் குறுகியகால வருமானமும், மரங்களின்மூலம் நீண்டகால வருமானமும் மிகப்பெரிய அளவில் பெறமுடியும்.

அதிக நிலப்பரப்பு உள்ள விவசாயிகளும் நிறுவனங்களும் சொட்டுநீர் பாசன முறையில் குறைந்த நீரினை பயன்படுத்தி மரங்களை வளர்ப்பதன்மூலம் பொருளாதார மேம்பாட்டையும் சுற்றுச்சூழல் இயற்கை வள மேம்பாட்டையும் உருவாக்கலாம்.
அனைத்து வகை மரங்கள் வளர்ப்பு குறித்த விரிவான ஆலோசனைகளும் கன்றுகளும் வன மரவிதைகளும் ஆய்வுப் பண்ணை முகவரியில் பெறலாம்.

ஏ.சந்தனமோகன், நிறுவனர், பிரபஞ்ச வளர்ச்சி கழகம், சந்தன வளர்ச்சி ஆய்வு பண்ணை, கந்தம்பாளையம், காமநாயக்கன்பாளையம், சூலூர், கோயம்புத்தூர்-641 658.
-ஏ.சந்தனமோகன், 09842930674.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

6 thoughts on “வறட்சியில் வளம் தரும் மரங்கள்

 1. Vignesh says:

  வேலூரில் இந்த மரக்கன்றுகள் எங்கு கிடைக்கும்.

  • admin says:

   வேலூரில் இஷா மையத்தில் தொடர்பு கொண்டு பாருங்கள். அவர்களின் பசுமை கரங்கள் மூலம் மர கன்றுகள் விற்கிறார்கள். Sholinghur Ragu தொடர்பு எண் Ph: 9360803551

 2. pandi says:

  sir theni dist இந்த மரக்கன்றுகள் எங்கு கிடைக்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *