வேகமாக மரம் வளர்க்கும் முறை !!

பொதுவாக மரம் வளர்க்க முறையான விதை போட்டு, நாற்று வைத்து வளர்த்தால் 2 ஆண்டுகளுக்கு மேல்தான் பலன் கொடுக்கும். இந்த வகையில் வேகமாக மரம் வளர்க்கும் முறை பற்றி இங்கு காண்போம்.

வேகமாக மரங்களை வளர்க்க ஆலமரம், அரச மரம், பு+வரசு, அத்தி மரம், வாகை போன்ற மரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

 

 

 

 

 

வளர்க்கும் முறை :

 •  மேற்கண்ட மரங்களை வளர்க்க அவற்றின் மரக்கிளையை 6 அடி அளவிற்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.
 • ஒரு சாக்குப்பையில் செம்மண் மற்றும் கரம்பை மணலோடு மக்கிய குப்பைகளை கலந்து தண்ணீர் ஊற்ற வேண்டும்.
 •  அதற்கு பிறகு 6 அடி உயரமுள்ள மரக்கிளையை அதில் நட வேண்டும். அதன் பிறகு 14-வது நாள் துளிர்க்க ஆரம்பித்துவிடும்.
 • 30-வது நாள் இலைகள் வந்துவிடும். 70-வது நாள் ஒரு மரம் நடவு செய்ய தயாராகிவிடும்.
 •  செடி நடவு செய்து, அது மரமாக வளர சில ஆண்டுகளாகும். அதனால், மரக்கிளைகளை வெட்டி, நடவு செய்து மரங்களாக உருவாக்கலாம்.
 • இவ்வாறு செய்வதினால் விதை போட்டு மூன்றாண்டுகளில் வளரக்கூடிய மரக்கன்றுகள், மரக்கிளைகளை வெட்டி நட்டால் 90 நாட்களிலேயே மரமாக வளர்ந்துவிடும்.

90 நாட்களில் மரம் வளர செய்ய வேண்டியவை :

 • ஒரு பெரிய மரத்தின் நடுத்தர அளவு உடைய கிளைகளின் குச்சிகளை 6 அடி நீளத்தில் வெட்ட வேண்டும்.
 • ஒரு சிமெண்ட் கோணிப்பையில் மண் நிரப்பி வைத்துக்கொண்டு, குச்சியின் பச்சைத்தன்மை மாறுவதற்குள் நட்டு விட வேண்டும்.
 • கால்நடைகளின் சாணம் போன்ற இயற்கை உரங்களை இட்டு, குறைந்தளவு நீர் ஊற்றிவர வேண்டும்.
 • நடப்பட்ட குச்சிகளை அசைக்கவோ, மாற்றவோ கூடாது. கால்நடைகள் இலையை மேய்ந்து விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
 • இப்படிப் பராமரித்தால், 30 நாள்களில் தளிர ஆரம்பித்து விடும். 90 நாள்களிலிருந்து நிழல் கொடுக்கிற அளவுக்கு மரம் வளர்ந்துவிடும்.
 • வேம்பு, அத்தி, மா, பு+வரசு போன்ற தமிழக தட்பவெப்ப நிலைக்கு உகந்த அனைத்து மரங்களையும் இம்முறையைப் பயன்படுத்தி வளர்க்கலாம்.

பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Related Post

One thought on “வேகமாக மரம் வளர்க்கும் முறை !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *