மரபணு மாற்றப்பட்ட பருத்தியை தாக்கும் புதிய எதிரி

மரபணு மாற்றப்பட்ட பருத்தி (BT) சர்ச்சையில் வெகு காலமாக இருந்து வந்துள்ளது. பருத்தியை தாக்கும் ballworm எனப்படும் புழுவில் இருந்து மரபணு மாற்றப்பட்ட பருத்தி பாதுகாத்தது. இந்த செடியின் மரபணுவை மாற்றி, நிலத்தில் உள்ள ஒரு பாக்டீரியாவின் மரபணுவை சேர்த்து இந்த “புதிய பயிரை”  உண்டாக்கினர். இயற்கையில் இப்படி ஒரு உயிரினத்தின் மரபணுவை எடுத்து மற்றொரு உயிரினத்தில் சேர்த்து உண்டாக்க பட்ட பருத்தி செடி இது. இந்த பருத்தியை இந்த பூச்சி கடித்தால் அதற்கு விஷம் ஆகி  இறக்கும்.மனிதர்க்கு ஒன்றும் ஆகாது

இந்த மரபணு மாற்றப்பட்ட பருத்தி கொஞ்சம் கொஞ்சமாக இந்தியா முழுவதும் பரவியது.

2003-2009 வருடங்களில் விவசாயிகளுக்கு ballworm பூச்சியில் இருந்து விடுதலை கொடுத்து மகசூல் அதிகம் ஆக உதவியது

ஆனால் 2010 ஆண்டுக்கு பின் மகாராஷ்ட்ரத்தில் பருத்தி விளைவித்த விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ள ஆரம்பித்தனர். மரபணு மாற்றப்பட்ட பருத்தி மானாவரி போன்ற நிலங்களில் நன்றாக விளையாது அதிக நீர் மற்றும் ஊடுபொருட்கள் தேவை என கண்டு பிடிக்க பட்டது.

இப்போது பஞ்சாபில் மரபணு மாற்றப்பட்ட பருத்தி வகைகளை புதிதாக வந்துள்ள வெள்ளை ஈ (White fly) தீர்த்து கட்டி வருகிறது. வீரிய வகையாகிய இந்த பருத்தியால் இந்த தாக்குதலை தாங்க முடியவில்லை. அதிகமாக பூச்சி மருந்து அடித்தும் பயன் இல்லை. இப்போது பஞ்சாபில் பருத்தி விவசாயிகள் நஷ்டம் ஏற்பட்டு தற்கொலை செய்து கொள்ளும் அவலம்.

எல்லா பிரச்னைகளுக்கும் தொழிற்நுட்ப தீர்வுகளை (Technocratic solutions) நம்புவது எவ்வளவு தவறு? ஒரு பூச்சியை எதிர்த்தால் மட்டும் போறுமா ? நம் மண்ணுக்கும், நீர் நிலைமைக்கும் ஏற்ற பாரம்பரிய பருத்தி வகைகளை பயிர் இட்டால் மகசூல் அவ்வளவு  இல்லாவிட்டாலும் நஷ்டம் ஏற்படாது அல்லவா?


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *