வீணாக்க படும் உணவும் மரபணு தொழிற்நுட்பமும்

சில நாட்கள் முன்பு ஆக்ஸ்போர்ட் பல்கலை கழகத்தில் பேசிய மார்க் லினாஸ் என்ற பேராசிரியர் “உலகத்தில் பெருகி வரும் மக்கள் தொகைக்கு உணவளிக்க 100% உணவு உற்பத்தியை பெருக்க வேண்டும். இதற்கு மரபணு மாற்றப்பட்ட தொழிற்நுட்பம் தேவையே”  என்றார்.இது எந்த அளவு உண்மை என்று பார்ப்போம்

இன்றைய தேதியில் உலகத்தில் 700 கோடி பேர் உள்ளனர். 2050 ஆண்டு இந்த மக்கட்தொகை 900 கோடி எட்டும் என கணக்கிட பட்டு உள்ளது. 2012 ஆண்டில் உலகத்தில் 87 கோடி மக்கள் சரியான உணவு இல்லாமல் இருக்கிறார்கள். அவற்றில் 25 கோடி இந்தியாவில் மட்டுமே

இதை படிக்கும் போது ஏதோ விவசாய சாகுபடி மிகவும் குறைந்து பற்றாக்குறை இருப்பது போன்றும் அதனால் தான் பட்டினி இருப்பது போன்ற உணர்வு தோன்றுவது இயல்பு.

ஆனால் உண்மை வேறு. 2012 ஆண்டு உணவு உற்பத்தி பார்ப்போம். அமெரிக்காவில் அதிகமான வறட்சி. ஆஸ்ட்ரேலியா அப்படியே. 40% சதவீதம் குறைந்து சாகுபடி செய்த வருடங்கள் அவை. அப்படியும் உலகில் 2239 மில்லியன் டன் உணவு உற்பத்தி ஆனது. உலக உணவு நிறுவனம் கணக்கு படி இந்த உணவில் 1300 கோடி மக்கள் உணவு அளிக்க முடியும்!

அதாவது இன்றைய உணவு உற்பத்தியிலேயே இன்றைய மக்கள் தொகையை போன்று 2 மடங்கு தாக்கு பிடிக்க முடியும். அப்படியானால் உணவு எங்கே போகிறது?

Food-Waste-FINAL

 

 

 

 

 

 

 

 

 

 

உண்மை என்ன என்றால் மேற்கத்திய நாடுகளில் 40% உணவு வீணாக்க படுகிறது. அமெரிக்க மட்டும் ஒரு வருடத்தில் $165 பில்லியன் அளவு உணவு வீணாக போகிறது. தேவையில்லாமல் வாங்குவது, தூக்கி போடுவது, போன்று பல காரணங்கள். அமெரிக்காவில் சூபர் மார்க்கெட்களில் 50% வரை காய்கறிகளும் பழங்களும் அழுகி தூக்கி போட படுகின்றன
food_waste_40percent

 

 

 

 

 

 

 

 

 

இந்தியாவும் இதற்கு விதி விலக்கல்ல. அதே அளவில் இல்லாவிட்டாலும்.

இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இந்தியாவில் 66 மில்லியன் டன் உணவு ஸ்டாக்கில் இருந்தது.  சரியாக சேமிக்காமல் மழையிலும் பூச்சிகளாலும் கெட்டு போனவை பல மில்லியன் டன்கள்.  இது போதாது என்று 9.5 மில்லியன் டன் கொடுமை 9 மில்லியன் டன் அரிசி நாம் ஏற்றுமதி செய்கிறோம். நம் நாட்டில் பட்டினியும் பசியும் இருக்கும் போது இப்படி உணவை வீணாக்கி ஏற்றுமதி செய்து பற்றாக்குறை செயற்கையாக அரசுகள் செய்கின்றன.
foodrot

 

 

 

 

இது முழுக்க முழுக்க விநியோகம் பிரச்னையே (Distribution problem) தவிர  குறைந்த உற்பத்தி (Not production problem) மூலம் வந்த பிரச்னை அல்ல. விளைவதை நன்றாக சேமித்து விநியோகம் செய்தாலே பசி பட்டினி குறையும்

இல்லாத ஒரு பிரச்னையை (Non existent issue) காட்டி மரபணு மாற்றல் தொழிற்நுட்பம்
நியாயப்படுத்த முயல்வது வேடிக்கையானதே!

நன்றி: Devinder Sharma in Times of india


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *