- மரவள்ளி சாகுபடி நிலத்தை மூன்று அல்லது நான்கு முறை நன்கு உழவு செய்து, கடைசி உழவில் ஏக்கருக்கு 10 டன் தொழுஉரம் அல்லது இரண்டு டன் மண்புழு உரம் இட வேண்டும்.
- டிரைகோடெர்மாவிரிடி இரண்டு கிலோ, அசோஸ்பைரில்லம் இரண்டு கிலோ, பாஸ்போ பாக்டீரியா இரண்டு கிலோ என்ற அளவில் இடவேண்டும்.
- மேலும், ஒரு வாரம் கழித்து யூரியா 40 கிலோ, சூப்பர்பாஸ்பேட் 235 கிலோ, பொட்டாஷ், 80 கிலோ என்ற அளவில் இட்டு 90 செ.மீ.,க்கு 90 செ.மீ., அல்லது 75 செ.மீ.,க்கு 75 செ.மீ., என்ற அளவில் பார் அமைத்து, 8 அல்லது 9 முளைப்புடன் கூடிய கரணைகள், நோய் தாக்காத வயலிருந்து எடுக்கப்பட்ட கரணை நடவு செய்ய வேண்டும்.
- நடவின்போது கரணைகளை கார்பன்டைசிம் 1 கிராம் ஒரு லிட்டர் தண்ணீர் என்ற அளவில் தயாரிக்கப்பட்ட கரைகளில் 15 நிமிடம், மூழ்கி இருக்குமாறு வைக்க வேண்டும்.அதன்பின், எடுத்து நடவு செய்ய வேண்டும்.
- மரவள்ளி சாகுபடிக்கு சொட்டு நீர்பாசனம் அமைத்து நீர்வழி உரம் கொடுப்பதன் மூலம் 15 முதல் 20 சதவீத மகசூல் அதிகரிக்கும்.
- தவிரக் களைக்கட்டுப்பாடு, கூலியாட்கள் குறைவு, குறைந்த நீரைக்கொண்டு அதிக பரப்பளவில் சாகுபடி ஆகிய நன்மைகள் கிடைக்கிறது.
- மரவள்ளிக்கு அமைக்கும் சொட்டு நீர் பாசன அமைப்புக் கொண்டு, பயிர்சுழற்சி மூலம் மஞ்சள், வெங்காயம், தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை ஆகிய அனைத்துப் பயிர்களுக்கும் நீர்பாய்ச்சலாம்.
- இம்முறையில் மரவள்ளி சாகுபடியில் தொழில்நுட்பங்களை கையாண்டு கூடுதல் மகசூல் எடுத்து நல்ல வருவாய் பெறலாம்.
இவ்வாறு தோட்டக்கலை உதவி இயக்குனர் தமிழ்ச்செல்வி தெரிவித்துள்ளார்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
pls upadate all agriculture details. i have owned 5 acres. pls give suitable tips and also send us the subsidy scheme details
n.swaminathan
kulitalai tk karur dt tamilnadu
Surely sir, we will do our best to update all agri details
regards
admin
இயற்கை இடுபொருள் ‘கொம்பு சானம்’ பற்றிய செய்முறை விளக்கம் மற்றும் அதன் நன்மைகள் பற்றி தகவல் இருந்தால் பகிறவும்..