“மரவள்ளி பயிருக்கு மேலுரம் இட்டு, நுண்சத்து பற்றாக்குறையை நிவர்த்தி செய்து கூடுதல் மகசூல் பெறலாம்’ என, மோகனூர் தோட்டக்கலை உதவி இயக்குனர் அசோகன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
- 90 நாள் வயதுடைய மரவள்ளி பயிருக்கு மேலுரமாக, ஒரு ஏக்கருக்கு, 18 கிலோ தழைச்சத்து தரக்கூடிய, 39 கிலோ யூரியா மற்றும், 48 கிலோ சாம்பல் சத்து தரக்கூடிய, 80 கிலோ பொட்டாஷ் உரத்தையும் இட்டு மண் அணைக்க வேண்டும்.
- மேலும், நுண் சத்து பற்றாக்குறையால் இலைகள் வெளிறிக் காண்பதும், அதை நிவர்த்தி செய்ய, ஒரு லிட்டர் தண்ணீருக்கு பெரஸ்சல்பேட் பத்து கிராம், ஜிங்ங்சல்பேட், ஐந்து கிராம் மற்றும் யூரியா, 20 கிராம் ஆகியவற்றை கலந்து காலை அல்லது மாலை வேலையில் மண்ணில் ஈரம் இருக்கும்போது தெளித்திட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்