ஏக்கருக்கு 4 லட்சம் வருமானம் எடுக்கிறேன் என்று கர்வத்துடன் கூறுகிறார் ஒரு சாதனை பெண் விவசாயி சிவகாமி விருமாண்டி.
இவர் வருடந்தோறும் கேந்திமலர் சாகுபடி செய்கிறார். ஈஸ்வெஸ்ட் நிறுவனத்தின் “”மேக்சிமா எல்லோ வீரிய ஒட்டு” என்ற ரகத்தை ஏக்கருக்கு 10 ஆயிரம் செடிகள் நான்கு உழவு முடிந்தவுடன் 2×2 அளவில் பார் அமைத்து நடவு செய்தார்.
செடி நட்ட 40 நாளில் முதல் அறுவடை வந்தது. பூ வந்த நாள் முதல் 100 நாட்கள் அறுவடை செய்யலாம். ஏக்கருக்கு 10 டன் பூ வந்தது. 1 கிலோ குறைந்த பட்ச விலை ரூ.40. அதிக பட்சம் ரூ.160. இந்த பூக்களுக்கு வருடத்தில் அனைத்து நாட்களிலும் நல்ல வரவேற்புள்ளது.
ஏக்கர் / 4,00,000. (10,000 x 50 = 5,00,000).
வருமானம் – ரூ.5,00,000. செலவு – 1,00,000. நிகர வருமானம் – ரூ.4,00,000.
செலவு: உழவு – 4000, நாற்று (ரூ) 30,000, மருந்து + உரம் – 16,000, கமிஷன் – 50,000, மொத்தம் 1,00,000. இவர்கள் பூப்பறிப்பதற்கு கூலி ஆட்கள் விடுவதில்லை.
இவருக்கு இவர் கணவர் விருமாண்டி D.Agri தொழில்நுட்ப விவரங்களை கற்றுத் தருகிறார். இவர் இந்த செண்டு பூ வீரிய நாற்றுகளை தமிழ்நாடு முழுவதும் வினியோகம் செய்கிறார். தொடர்புக்கு : 09626289640
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
Super good information sir
ஆடி மாதத்தில் நடவு செய்யலாமா