அனுபவ விவசாயி விழுப்புரம் மாவட்டம், துளுக்கபாளையம் கிராமத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் கூறுவது –
- கொள்ளை விதைத்து விட்டு அறுவடைக்குப் போனால் போதும். மானாவாரியில் கம்பு விதைச்சா விளைச்சலுக்கும் விலைக்கும் உத்திரவாதம் கிடையாது. ஆனா கொள்ளு விதைச்சா விளைச்சலுக்கும் விலைக்கும் உத்தரவாதம் இருக்கு.
- அதிகம் கறுப்பு கொள்ளுக்கு நல்ல தேவை இருக்கு. வழக்கமான கொள்ளு விதைகளைப் பயன்படுத்தும் முறையில் கறுப்புக்கொள்ளு விதைகளையும் சாம்பார், ரசம், துவையல்னு பயன்படுத்தலாம்.
- கறுப்பு கொள்ளு சாகுபடி காலம் 120 நாட்கள். கார்த்திகைப் பட்டம் ஏற்றது. தண்ணீர் தேங்கி நிற்காத எல்லா நிலங்களிலும் சாகுபடி செய்யலாம்.
- இரண்டு மூன்று உழவு செய்து கடைசி உழவுக்கு முன்பு ஏக்கருக்கு 6 முதல் 8 கிலோ விதைகளைப் பரவலாக விதைத்து விட வேண்டும்.
- மண்ணிலும், காற்றிலும் இருக்கும். ஈரப்பதத்தில் விதைகள் 5 முதல் 7 நாட்களில் முளைப்பு எடுத்து விடும்.
- 20 முதல் 25 நாட்களில் ஒரு களை எடுக்க வேண்டும்.அதற்கு மேல் செடிகள் வளர்ந்து கொடிகளாகப் படர ஆரம்பிக்கும்.
- மானாவாரி என்பதால் கிடைக்கும் மழைத்தண்ணீரை வைத்தே வளர்ந்து விடும்.
- 80ம் நாளில் பூவெடுத்து 90ம் நாளில் காயாக மாறி 120ம் நாளில் காய்கள் முற்றி அறுவடைக்கு வந்து விடும். கதிர் அரிவாள் கொண்டு அறுவடை செய்து இரண்டு நாட்கள் காயவைத்து கம்பு கொண்டு தட்டினால் விதை தனியாக வந்து விடும்.
- விவசாயி 40 சென்ட் நிலத்தில் 200 கிலோ மகசூலாக எடுத்துள்ளார். ஒரு கிலோ 65 ரூபாய்க்கு விற்பனை செய்து 13 ஆயிரம் ரூபாய் வரை பெற்றுள்ளார். செலவு 3 ஆயிரம் ரூபாய் ஆகிறது.
- சித்த மருத்துவம் செய்கிறவர்களும், இயற்கை அங்காடி நடத்துறவங்களும் விரும்பி வாங்குகிறார்கள். மேலும் விபரங்களுக்கு பாலசுப்பிரமணியன், அலைபேசி : 09843488990.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்