கோவை மாவட்டம் தொண்டாமுத்துார் அருகே தீனாம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் மனையியல் பட்டதாரி ஜெயா வரதராஜன். இவர் தனது இரண்டரை ஏக்கரில் 2009ல் முள் சீத்தாப்பழம் 19க்கு 19 அடி வீதம் சாகுபடி செய்தார். இயற்கை வேளாண்மை மூலம் தொழுவுரம், அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியம், சூடோமோனாஸ் பயன்படுத்துகிறார். நீர் சிக்கனம் கருதி சொட்டு நீர் பாசனம் மூலம் சாகுபடி செய்கிறார்.
ஆண்டு தோறும் அக்டோபரில் முள் சீத்தாப்பழம் அறுவடை செய்கிறார். மதிப்பூட்டிய முள் சீத்தாப்பழங்களை கொடுத்து வருகிறார்.
‘கேன்சர் கில்லர்’:
புற்று நோய்க்கு கொடுக்கும் ரசாயன மருந்துகளை விட முள் சீத்தாப்பழம் ஆயிரம் மடங்கு எதிர்ப்புத்திறன் கொண்டது என சித்த மருத்துவம் கூறுகிறது.
‘கேன்சர் கில்லர்’ என அழைக்கப்படும் முள் சீத்தாப்பழம் அனைத்து வகையான புற்று நோய் மற்றும் பிற நோய்கள் வராமலும் தடுக்கிறது.
அமெரிக்காவின் அமேசான் மழைக்காடுகள், கரீபியன், மத்திய அமெரிக்கா, தென் கிழக்கு ஆசிய நாடுகளில் பரவலாக விளைகிறது.
இது பலாப்பழம் போல் முட்கள் கொண்டுள்ளதால் ‘பலா ஆத்தா’ எனவும் அழைப்பர். கார்போ ஹைட்ரேட், பிரக்டோஸ் மற்றும் கணிசமான அளவில் வைட்டமின் சி, பி1, பி2 சத்துக்கள் பொதிந்து கிடக்கின்றன.
இலைகள், விதைகள் மருத்துவ உபயோகத்துக்கு பயன்படுகிறது.
காலையில் பூக்கும் முள் சீத்தாப்பழத்தின் வெளிர்மஞ்சள் நிறப்பூ அருமையான வாசனையை தருகிறது.
தொழில் நுட்பம் அறிய 09894698383 .
– டி.யுவராஜ், வேளாண் பொறியாளர்
உடுமலை.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்