கொடுக்காப்புளி

Courtesy: Dinamalar
Courtesy: Dinamalar

 

 

 

 

 

  • வெயிலையும், வெப்பத்தையும் விரும்பும் வித்தியாசமான பழமாக இருப்பது கொடுக்காப்புளி. உவட்டு பூமியிலும், உவர்நீரிலும் கூட வளரும் தன்மையுடையது.
  • தமிழகத்தில் கொடுக்காப்புளியை கோணப்புளியங்காய் என்றும் அழைக்கின்றோம்.
  • கொடுக்காப்புளி கால்நடைகளுக்கு ஏற்ற தீவன மரம். இதன் தழைகள் வெள்ளாடுகளுக்கு பிரியமான தீனி.
  • கொடுக்காப்புளி தரிசைத் தங்கமாக்கும் மரம். பல்வேறு சூழ்நிலைகளிலும் வளரக்கூடியது. மண் அரிமானம் ஏற்பட்டு வடிவம் இல்லாமல் கிடக்கும் பூமியைக்கூட சமன்படுத்தி நடலாம்.
  • மணல் பகுதிகள், தேரிகளிலும் நடலாம். கடலோர மணல் பகுதிகள், உவர் நிலங்கள், உதவாக்கரை பூமிகளிலும் வளர்ந்திருக்கும்.
  • தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஜூன் – ஜூலை அக்னி நட்சத்திர வெயிலின் கடுமை குறைந்த தருணம், அப்போது தென்மேற்கு பருவமழையும் ஆரம்பித்திருக்கும்.
  • இத்தருணத்தில் கன்றுகளை நடலாம். பி.கே.எம்.1 ரகம் தரத்தில் சிறந்தது.
  • நல்ல சுவை உடையது. கொடுக்காப்புளியில் ஒட்டுக்கன்றுகள் கிடைக்குமிடம், ஏந்தல் நர்சரி கார்டன் – அருண் நாகராஜ், சாலைப்புதூர் (திண்டுக்கல் – வத்தலக்குண்டு ரோடு) திண்டுக்கல் மாவட்டம். அலைபேசி : 09842134208, 09865234208.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *