சிக்கனம் தரும் ஸ்மார்ட் செங்கல்

வீட்டுக் கட்டுமானத்தில் ஏற்படும் செலவுகளைக் குறைக்கும் விதமாக இன்று பல்வேறு விதமான மாற்றுக் கட்டுமானப் பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. அவற்றுள் ஒன்றுதான் புரோத்தர்ம் ப்ளாக். (Porotherm bricks) இது செங்கல்லுக்கான மாற்றுப் பொருள். நவீன காலக் கட்டுமானத் தொழில் நுட்பக் கட்டிடங்களில் பயன்படுவதால் இது ஸ்மார்ட் செங்கல் என்றும் அழைக்கப்படுகிறது.

ஸ்மார்ட் செங்கல் என்றால் என்ன?

வெய்னர்பெர்ஜர் Wienerberger என்னும் ஆஸ்திரய நிறுவனத்தின் தயாரிப்பு இது. ஹாலோ ப்ரிக்ஸ் (Hollow bricks)  வகையைச் சேர்ந்த கட்டுமானப் பொருள்தான் இது. தர்பூசணிப் பழத்தின் நுட்பத்தைப் போல இந்தச் செங்கல் உருவாக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. தர்பூசணியின் மேற்புறம் இளம் சூட்டுடன் இருக்கும். ஆனால் அதன் உட்பகுதி குளிர்ச்சியானதாக இருக்கும் இல்லையா? அதுபோலவே இந்தக் கட்டுமானக் கற்களும் வீட்டின் உட்பகுதியைக் குளிர்ச்சியாக வைத்திருக்கும். களிமண்ணில் இருந்து இந்த வகைக் கற்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்த வகைக் கற்களுக்குத் துளைகள் உண்டு. படுக்கை வசத்தில் துளையிட்ட கற்கள், மேல் வசத்தில் துளையிட்ட கற்கள் என இதில் இரு வகைகள் உள்ளன.

பயன்கள் என்னென்ன?

  • பாரம்பரிய செங்கற்களை விட 60 சதவீதம் எடையற்றது.
  • கையாள்வது எளிது. அதனால் கட்டுமான நேரம் குறைவாகும்
  • வெப்பத்தைத் தாங்கக்கூடிய தன்மையில் பாரம்பரிய செங்கற்களை விட 45 சதவீதம் சிறப்பானது
  • இது சுற்றுச் சூழலுக்கு உகந்த கட்டுமானப் பொருள். இந்திய பசுமைக் கட்டிடக் கவுன்சில் ஒப்புதல் பெற்றது.
  • இந்தக் கட்டுமானப் பொருள் பயன்படுத்தப்பட்ட கட்டிடங்களில் துளையிடுவது எளிது. இதனால் வீட்டுக்குள் ஏசி, எலக்ட்ரிக்கல்ஸ், உள் அலங்காரம் போன்ற வேலைகளைச் செய்வது எளிதாக இருக்கும்.

முன்னுதாரணக் கட்டிடம்

புரோத்தர்ம் ப்ளாக் கட்டுமானக் கற்களைப் பயன்படுத்தி பல கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்று கிளியர்வியூ ஹோம்ஸ். இது லண்டனில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டிடம். ஐம்பது வீடுகள் கொண்ட இந்த அடுக்ககம் முழுவதும் புரோத்தர்ம் ப்ளாக் கட்டுமானக் கற்களைப் பயன்படுத்திக் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கட்டிடம் கட்ட நிர்ணயிக்கப்பட்ட இலக்கு ஐந்து மாதங்கள். ஆனால் இந்தக் கட்டுமானக் கற்களைப் பயன்படுத்திக் கட்டியதால் மூன்று மாதங்களுக்கு முன்பே இதன் பணிகள் முடிவடைந்துவிட்டதாக கிளியர்வியூ ஹோம்ஸ் நிறுவனத்தின் மேலாளர் ரிச்சர்ட் டுருரி தெரிவிக்கிறார்.

1269846301262

இந்தியாவில் கிடைக்கிறதா?

இந்த நிறுவனம் இந்தியாவில் கர்நாடகாவில் தங்கள் தயாரிப்பு நிறுவனத்தை நிறுவியுள்ளது. அவர்கள் நேரடியாக 300 மேற்பட்ட கட்டுமானத் திட்டங்களுக்குத் தங்கள் புரோத்தர்ம் ப்ளாக் கட்டுமானக் கற்களை விநியோகித்துள்ளார்கள். இது தவிர சென்னை, கோவை, திருச்சி, புதுச்சேரி, மதுரை ஆகிய ஊர்களில் இந்தக் கற்களுக்கு விநியோகிஸ்தர்களும் உள்ளனர். இந்தக் கற்கள் மூன்று அளவுகளில் (400 x 200 x 200 mm, 400 x 150 x 200 mm, 400 x 100 x 200 mm) கிடைப்பதாக சென்னையைச் சேர்ந்த விநியோகஸ்தர்களில் ஒருவரான உமாபதி தெரிவிக்கிறார். விலை முறையே ரூ.62, ரூ.52, ரூ.42 உள்ளதாகவும் அவர் தெரிவிக்கிறார்.

கட்டுமானத்தில் பயன்படுத்துவது எப்படி?

புரோத்தர்ம் ப்ளாக் கட்டுமானக் கற்களைப் பொறுத்தவரை இவை மரபான கட்டுமானக் கற்களிலிருந்து மாறுபட்டவை. இதற்குத் தனியான பொறுத்தும் உபகரணங்கள் உள்ளன. இந்தத் தொழில்நுட்பம் இந்தியாவுக்குப் புதிது என்பதால் இது குறித்து விளக்கத் தொழில்நுட்பவியலாளர் ஒருவரைக் கட்டுமான நடைபெறும் இடத்துக்கு இந்நிறுவனமே அனுப்பி உதவும் என உமாபதி தெரிவிக்கிறார்.

இந்த வீடுகளில் நுழைந்தாலே சில் என்று இருக்கிறது.  சென்னை மற்றும் தமிழ்நாடு நகரங்களில் அதிகம் வெயில்  அடிப்பதால்,இப்படிப்பட்ட கற்களை கொண்டு கட்டப்படும் வீடுகளில் மின்சார செலவு குறைகிறது.

Indian School of Business Hyderabad - built with Porotherm bricks
Indian School of Business Hyderabad – built with Porotherm bricks

நீங்களும்  உங்கள் வீட்டில் பயன் படுத்தலாமே?

Legacy Dimora Apartments, Bangalore, built with Porotherm bricks
Legacy Dimora Apartments, Bangalore, built with Porotherm bricks

மேலும் விவரங்களுக்கு – http://www.wienerberger.in/

இந்த கற்கள் மூலம் கட்டப்பட்டுள்ள இந்தியாவில் உள்ள கட்டிடங்கள் பற்றி அறிய – http://www.wienerberger.in/clients-projects/clients.html?lpi=1352414661934

நன்றி: ஹிந்து


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *