தேன் உற்பத்திக்கு உதவும் ஏராளமான மரங்கள், தாவரங்கள் உள்ளன என்று தோட்டக்கலைத்துறை தெளிவு படுத்தி உள்ளது.
உடுமலை வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் டாக்டர் இளங்கோவன் கூறியுள்ளதாவது:
- மூலிகை பயிர்கள், சீரகம் மற்றும் முருங்கை சாகுபடி செய்யப்பட்டுள்ள பகுதிகளில் கிடைக்கும் தேன் தரமானதாக உள்ளதால் அதற்கு அதிக விலை கிடைக்கிறது. பல பகுதிகளில் இயற்கையாக தேன் கிடைக்க வாய்ப்பு இருந்தாலும், செயற்கையாக தேனீப் பெட்டிகள் அமைத்து வைத்து தேன் பெறலாம். ஒரு ஏக்கரில் 20 பெட்டிகள் வைத்து தேனீக்கள் உதவியுடன் தேன் அறுவடை செய்தால் நல்ல வருமானம் கிடைக்கும்.
- தேன் பெற போதிய தாவரங்கள் இல்லாதவர்கள் சிறு,சிறு பாத்திகளில் மதுரம் தரும் தாவரங்களை வளர்க்கலாம்.
- குறிப்பாக மா, புளி, வேம்பு, இலவன், முருங்கை, ரப்பர், அகத்தி, அரப்பு, புங்கன், அரசு, சிசு, அர்ச்சனை தீக்குச்சி மரம், இலந்தை, குதிரை மசால், காப்பி ஆகிய தாவரங்களை வளர்க்கலாம்.
- இந்த தாவரங்களில் உள்ள தேனை தேனீக்கள் உறிஞ்சி அயல் மகரந்த சேர்க்கைக்கு உதவுவதால் தென்னை, பனை, வேல், பாக்கு, தக்காளி, சோளம், கம்பு, கத்தரி, பூசணி போன்றவற்றை தாராளமாக சாகுபடி செய்யலாம்.
- அதுமட்டுமல்ல மதுரம் மற்றும் மகரந்தம் தரும் பயிர்கள் உள்ளவர்கள் அதாவது முருங்கை, வாழை, கொய்யா, சூரியகாந்தி, எள், கடுகு, தைலமரம், சப்போட்டா, வெங்காயம் சாகுபடி செய்துள்ளவர்கள் தேனீப்பெட்டிகள் வைத்து நல்ல வருமானம் பார்க்கலாம்.
நன்றி: தினகரன்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
thanks to you sir i ma palani very uses full me in my field at near palani varathappa naickan patti 24/1,24/2 I am doing my field sir
தேனீ வளரக்க பயிற்சி கிடைக்கும் இடத்தை தெரியப்படுத்தவும்.நான் திருவாரூர் மாவட்டம்.