இன்று எங்கு பார்த்தாலும் பசுமைக்குடில் மூலம் விவசாயம் நடக்கிறது. வருடம் முழுவதும் காய்கறிகள், காளான் வளர்ப்பு, நாற்று உற்பத்தி செய்து சம்பாதிக்கின்றனர். அது பற்றி அறிவோம்.
- 90 முதல் 95% பயிர்கள் வயல்வெளிகளில் வளர்க்கப்படுகின்றன. ஆனால் வருடம் முழுவதும் வளர்க்க முடியாது. ஆனால் பசுமைக் கூடாரம் அமைத்தால் வருடம் முழுவதும் விவசாயம் செய்ய இயலும்.
- குளிர்பிரதேசங்களில் அதிகப்படியான குளிரில் இருந்து பயிர் களை தொடர்ந்து காப்பாற்றி, உயர் மதிப்புள்ள பயிர்களை வளர்க்க “”பசுமைக் கூடார தொழில்நுட்ப முறைகள்” உருவாக்கப்பட்டன.
- காற்று, குளிர், மழை, அதிக சூரிய ஒளி, அதிக வெப்பம், பூச்சி மற்றும் நோய்களில் இருந்து பாதுகாக்கிறது.
- பசுமைக் கூடாரம் என்பது ஒளி ஊடுருவக் கூடிய கண்ணாடி அல்லது பிளாஸ்டிக் போர்த்தப்பட்ட அமைப்பாகும்.
- இதனுள் தேவையான தட்பவெப்ப நிலை உருவாவதுடன், இரவில் வெளியிடும் கரியமில வாயு உள்ளேயே தங்கி, ஒளிச்சேர்க்கைக்கு உதவுகிறது. விளைச்சல் அதிகமாகிறது. ஈரப்பதம் குறையாது. அதிகநீர் தேவைப்படுவதில்லை.
பசுமைக் கூடாக பயன்கள்:
- பூச்சி, எலி, பறவைகளின் தாக்குதல் இல்லை.
- வெப்பம், பெரும் மழை, காற்று தடுக்கப்படும்.
- பூச்சி மருந்து / உரங்களின் சரியான பயன்பாடு சாத்தியமாகும்.
- தட்பவெப்பம் கட்டுப்படுவதால் வருடம் முழுவதும் எந்த பயிரையும் பயிர் செய்யலாம்.
- ஆண்டு முழுவதும் காய்கறிகள், கொய்மலர்கள் கிடைப்பதால் லாபம் அதிகமாகிறது.
- இதனை அமைக்க சிறிது மேடான இடமாக இருக்க வேண் டும்.
- தேவையான மின்சாரம் கிடைக்க வேண்டும்.
- அருகில் மரம்/ கட்டிடம் இருக்க கூடாது. கிழக்கு – மேற்காக அமைக்க வேண்டும். வாய்க்கால் வடக்கு – தெற்காக அமைய வேண்டும்.
அமைக்கும் முறை :
- 4X2 மீ அளவில் செவ்வகமாக உருவாக்கலாம்.
- 4 மூளைகளிலும் இரும்புக் குழாய்களை கான்கிரீட் மூலம் நிறுவ வேண்டும்.
- பின் முடிவுச் சட்டத்தைப் பொருத்த வேண்டும்.
- பக்கவாட்டு தாங்கிகளை பொருத்த வேண்டும். பின் தேவைப்படும் குழாய்களை நிறுவ வேண்டும்.
- பின் கூடாரத்தின் மேல் பாலிதீன் தாள் கொண்டு மூட வேண்டும்.
- காற்றோட்ட வசதி, சூடேற்றும் வசதி செய்ய வேண்டும். இதன் மூலம் கொய்மலர்கள், காளான், தரமான நல்ல விளைச்சல்களைப் பயிரிடலாம்.
– எம்.ஞானசேகர், 09380755629
நன்றி:தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்