ராசிபுரம் அருகே பாக்குத் தோப்பில், ஊடு பயிராக, காஃபி செடி பயிரிடப்பட்டு வருகிறது.நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தொ.ஜேடர்பாளையம் அருகே ஒசைக்கரையான் ஊற்று உள்ளது. கொல்லிமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள இப்பகுதியை சேர்ந்தவர் வக்கீல் குமார்.
அவருக்கு சொந்தமான மூன்று ஏக்கர் நிலத்தில், பாக்கு மரங்களை நட்டு பராமரித்து வருகிறார். பாக்கு மரத்தின் இடையே, ஊடுபயிராக, காஃபி செடி வளர்க்க முடிவு செய்தார்.
- நாமகிரிப்பேட்டை தோட்டக்கலை துறை மூலம், 3,000 காஃபி செடிகளை பெற்று, அதை, பாக்கு மரத்தின் இடையே ஊடுபயிராக பயிரிட்டுள்ளார்.
- இந்த காஃபி செடிகள், இரண்டரை ஆண்டுகளில் பலன் தரக்கூடியது.
- இந்த காஃபி செடி வளரும்போது, அதன் இலைகள், நன்கு படர்ந்து, நிழலைத் தருவதுடன், அப்பகுதியில் நல்ல குளிர்ச்சியை தரும் தன்மை கொண்டது.
- அதனால், பாக்கு மரத்துக்கு தண்ணீர் பாய்ச்சும் போது, தண்ணீர் ஆவியாகாமல், காஃபி செடி பார்த்துக்கொள்கிறது.
- மேலும், கூலி ஆட்களை வைத்து களை எடுக்கும் வேலையும் மிகக்குறைவு.
- பருவ நிலைக்கு ஏற்ப காஃபி செடியின் இலைகள் உதிரும். அவ்வாறு உதிரும் இலைகள், பாக்கு மரத்துக்கு நல்ல தழைச்சத்து உரமாக மாறுகிறது.
- காஃபி செடிக்கு என்று தனியாக தண்ணீர் பாய்ச்ச வேண்டும் என்ற கவலையும் இல்லை.
- அதற்காக தனியாக தண்ணீர் பாய்ச்ச வேண்டியதில்லை. ஒரே நேரத்தில் தண்ணீர் பாய்ச்சும்போது, இரண்டு பயிர்களுக்கும் சென்றடைகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்