கூடலுார், பந்தலுார் பகுதிகளில் பாக்கு மரங்களுக்கு மத்தியில் ஊடுபயிராக நேந்திரன் வாழை அதிகளவில் விளைவிக்கப்படுகிறது.கூடலுார், பந்தலுார் பகுதிகளில் உள்ள சதுப்பு நிலப்பகுதிகளில் பயிரிடப்பட்டு வந்த நெல் விவசாயம் காலநிலை மாற்றத்தால் படிப்படியாக கைவிடப்பட்டு வருகிறது.இந்த நிலங்களில் தேயிலை, காபி, இஞ்சி, வாழை மற்றும் பாக்கு விளைவிப்பதில் விவசாயிகள் அதிகளவில் ஈடுபட்டுள்ளனர்.
தற்போது, நேந்திரன் வாழை விளைவிப்பதில், விவசாயிகள் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக, பாக்கு மரங்களுக்கு இடையில் ஊடுபயிராக நேந்திரன் வாழை விளைவிக்கப்படுகிறது. இதனால், வாழைக்கு இடும் உரங்கள் பாக்கு மரங்களுக்கும் கிடைக்கும் என்பதுடன்; காற்றில் வாழை சாயாமல் பாதுகாப்பதற்கும் பாக்கு மரங்கள் பயன்படுகின்றன.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்