மருத்துவ குணம் மிகுந்த “ஸ்பைருலினா’ வளர்ப்புக்கு தேவையான ஆலோசனையை கால்நடை மருத்துவ பல்கலை ஆராய்ச்சி மையம் வழங்குகிறது.
உலகில் 25 ஆயிரம் பாசியினங்கள் உள்ளன. இதில் 75 வகை உணவாக பயன்படுகிறது. 3.5 கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றிய “ஸ்பைருலினா’ (Spirulina) என்ற நீலப்பச்சை மூலிகை பாசி 100 சதவீதம் மருத்துவ குணம் உடையது. இதை “சுருள்பாசி’ என்றும் கூறுவர். மற்ற தாவரங்களை விட 40 சதவீதம் கூடுதலாக புவி மாசுபடுவதை தடுக்கிறது.
ஆயிரம் கிலோ காய், பழங்களில் கிடைக்கும் ஊட்டச்சத்து இதன் ஒரு கிலோவில் கிடைக்கிறது என, நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. விண்வெளி உணவாக பயன்படுகிறது. இது முழுமையான சமச்சீர் உணவாக என்பதால் தினசரி 4 கிராம் வரை உட்கொண்டால் உடம்பிற்கு நல்லது என, உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. “ஸ்பைருலினா’ வளர்ப்புக்கு தேவையான ஆலோசனையை திண்டுக்கல் கால்நடை மருத்துவ பல்கலை ஆராய்ச்சி மையம் வழங்கி வருகிறது.
மையத்தலைவர் பீர்முகமது கூறியதாவது: “ஸ்பைருலினா’ மீன், இறைச்சி, முட்டையை காட்டிலும் 5 மடங்கு புரதம் உள்ளது. தாவர வகை புரதமாக இருப்பதால் எளிதில் ஜீரணமாகும். வைட்டமின் ஏ, காமாலினோலெனிக் அமிலம், குளோரோபில், பைகோசையனின், மெக்னீசியம், வைட்டமின் பி12, அமினோ அமிலங்கள் உள்ளன. நோய் எதிர்ப்பு, ரத்த சிவப்பு அணுக்கள் அதிகரிக்க, ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவது என பலவகையில் பயன்படுகிறது. இந்த பாசியை 10 அடி அகலம் 20 அடி நீள தொட்டியில் தண்ணீர் நிரப்பி வளர்க்கலாம். இதற்கு ரூ.60 ஆயிரம் இருந்தால்போதும். மாதம் ரூ.20 ஆயிரம் வரை லாபம் பெற முடியும், என்றார்.
இவரை தொடர்பு கொள்ள: Dr. S.Peer Mohammed, Associate Professor and Head,
Veterinary University Training And Research Centre,
Collectorate Campus,
Dindigul – 624 004.
Phone: 0451-2460141
ஈமெயில் : drpeer57@gmail.com மொபைல் : 9443321882
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
I need to get any license for this type of cultivation?
I am very much interested to start this type of business. Plz guide me. Thank you.