முடக்கத்தான் செடிக்கு மவுசு

க.பரமத்தி பகுதியில், மருத்துவம் குணம் கொண்ட முடக்கத்தான் செடிகள் கிராமப்புற காடுகளில் படர்ந்து காணப்படுவதால், நாட்டு மருத்துவர்கள் அவற்றை சேகரிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மனிதர்களுக்கு, மூட்டுவலி சரி செய்ய மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் பெரும்பாலும் குணமடைவதில்லை. மாத்திரையால் சிலருக்கு ஒத்துக்கொள்ளாமல் பக்க விளைவுகளை ஏற்படுத்திவிடுகிறது.

இதற்கு சிறந்த மருந்தாக முடக்கத்தான் செடியின் இலையை பயன்படுத்தினால், மூட்டுவலி, கால்பாத நோய், நரம்பு தளர்ச்சிக்கு மிகவும் பயன்படக்கூடியதாக உள்ளது. அதனால், க.பரமத்தி முதல், வைரமடை வரை சாலையில் இருபுறமும் உள்ள வேலியில் பூத்து குழுங்குகிறது. இதை கிராமப்புற மக்கள் அன்றாடம் பறித்து பயன்படுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து, க.பரமத்தி அரசு ஆரம்ப பழைய சித்தா டாக்டர் சுரேந்தரன் கூறியதாவது: மருத்துவமனை வசதியில்லாத போது காடுகளில் கிடைக்கும் மணத்தக்காளி, கீழா நெல்லி வேர், சிறியா நங்கை, பெரியா நங்கை, முடக்கத்தான் இலை, ஆடுதொடா இலை போன்றவை, மருந்தாக பயன்படுத்தி வந்தனர். இவற்றை பயன்படுத்த, தற்போது சாலையோரங்களில் வளர்ந்துள்ளதை பறித்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

நன்றி:தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *