ரோஜா சாகுபடியில் சாப்ட்வேர் என்ஜினீயர்!

பட்டம் படித்து, சென்னை ஐ.டி., கம்பெனியில் பார்த்து வந்த சாப்ட்வேர் டெவலப்பர் வேலையை விட்டுவிட்டு, விவசாயத்தின் மீதான ஆர்வத்தால் இயற்கை விவசாயத்தில் ‘ரோஜா’ பயிரிட்டார். தற்போது எட்டு ஆண்டுகளுக்கு மேல் லாபம் பார்த்து ரோஜாவால் ராஜாவாக திகழ்கிறார், திண்டுக்கல் தவசிமடை மருதமுத்து.அவர் கூறியதாவது:

கிருஷ்ணகிரி, பட்டுக்கோட்டையில் இருந்து ரூ.6 முதல் ரூ.12 க்கு முள்ளில்லா ரோஜா (சிவப்பு ரோஜா) கன்று வாங்கினேன்.
அறுபதுசென்ட் இடத்தில் அரை அடி குழியில், ஒரு அடிக்கு ஒரு அடி இடைவெளியில், வரிசைக்கு வரிசை 8 அடி நீளத்தில், 2400 கன்றுகள் நடவு செய்தேன்.

ரோஜாவுடன் சேர்த்து ஊடுபயிர் விளைவிக்க நினைத்தால், ஒவ்வொரு வரிசைக்கும் இடையில் இருக்கும் வெற்றிடத்தில், வெங்காயம், வெண்டைக்காய், புளிச்சக்கீரை, முள்ளங்கி நடவு செய்யலாம். தண்ணீருக்கு வரப்பு வாய்க்கால், தண்ணீர் பற்றாக்குறையான பகுதியில் சொட்டு நீர்ப்பாசன முறையையும் பயன்படுத்தலாம்.
நடவு செய்து 2 அல்லது 3 மாதத்தில் பூப்பூக்க துவங்கும். துவக்கத்தில் அரை கிலோ வரை மகசூல் கிடைக்கும். அதன் பின் 4 அல்லது 5 மாதங்களில் 30 கிலோ வரை மகசூல் கிடைக்கும். உரமாக ஜீவா அமிர்தம்(சாணம், கோமியம், நாட்டு சர்க்கரை, பயறு, சாணி மாவு, தண்ணீர் கலந்தது)கரைசலை தண்ணீருடன் சேர்த்து, வாரத்திற்கு ஒரு முறை பாய்ச்சலாம்.

Courtesy: Dinamalar
Courtesy: Dinamalar

இந்த உர கரைசலை நாமே தயாரித்து கொள்ளலாம். பராமரிப்பிற்கு என்று வேலையாட்கள் தேவையில்லை. ஒரு நபர் மட்டுமே போதும். ரோஜாவில் ஒரு வித இனிப்பு சுவை இருப்பதால், ஈக்கள், பூச்சிகள் தாக்குதல் ஏற்பட வாய்ப்புண்டு. அதனை தடுக்க வெப்பம் இலை, நொச்சியிலை, எருக்கு இலை, ஊமத்தன் இலையை நான்கைந்து எடுத்து கோமியத்தில் 22 நாட்கள் ஊற வைத்து தண்ணீர் கலந்து செடிகளில் ஸ்பிரே செய்தால் போதும். பூச்சி தாக்குதல் இருக்காது.

 

 

 

 

ஒரு கிலோ ரோஜா ரூ.80 வரை விலை போகும். 60 சென்டில் தினமும் 20 கிலோ வரை மகசூல் கிடைத்தால் தினமும் ரூ.1600 கிடைக்கும். பராமரிப்பு, இதர செலவுகள் ரூ.600 போக, தினமும் ரூ.ஆயிரம் கிடைக்கும். மாதம் ரூ.30 ஆயிரம் எனில், ஆண்டுக்கு ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் வரை லாபம் கிடைக்கும்.

Courtesy: Dinamalar
Courtesy: Dinamalar

 

 

 

 

 

 
குறைந்தபட்சம் 25 முதல் 50 சென்ட் சாகுபடி செய்ய ரூ.50 ஆயிரத்திற்கு மேல் செலவு செய்தாலும், செலவை தாண்டிய லாபம் என்பது பல மடங்காகும், என்றார். இவரை 09787642613 தொடர்பு கொள்ளலாம்.

நன்றி:தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *