- மலர்களில் ‘மகாராணி’ எனவும் ‘தோட்ட ராணி’ எனவும் அழைக்கப்படும் ரோஜா மலர் சாகுபடி செம்மண்ணுக்கு ஏற்றதே.
- இதனை வணிக மலராக, இறை வழிபாட்டு மலராக, சுப நிகழ்ச்சிகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனினும், வாசனை திரவியம், ஆயுர் வேத மருத்துவப் பொருள் தயாரிப்பதற்காகவும் ரோஜா பெருமளவு பயிரிடப்படுகிறது.
- ரோஜா மூலம் பன்னீர், அத்தர், குல்கந்து, சென்ட், பான்சாரி, குல்ரோகான் தயாரிப்பில் பல லட்சம் ரூபாய் லாபம் பார்க்க இயலும். ரோஜா ஒரு காதல் மலராகும். உலகின் பல நாடுகள் ரோஜாவை தன் தேசிய மலராக மதிக்கின்றன.
- குறிப்பாக அமெரிக்கா, பல்கேரியா, இக்குவேடார், ஈரான், ஈராக் லக்சம்பார்க், மாநிலத்தீவுகள், இத்தகைய சிறப்பை ரோஜாவுக்கு அளிப்பது கண்கூடு. ரோஜா என்ற அழகு மலரை பசுமைக்குடில், திறந்த வெளி, ஊடுபயிர் முறையில் சாகுபடி செய்ய ஏற்றது.
- அதிக வளம் உள்ள வண்டல் மண் மட்டுமல்லாமல் நல்ல வடிகால் வசதியுள்ள மண்ணில் ரோஜா வளர்த்து லாபம் அடையலாம்.
- தளிர், உவர் மண்ணில் ரோஜா வளராது.
- நிலத்தில் நல்ல காற்றோட்டம் உள்ளதாகவும், போதிய சூரிய ஒளியும் இருக்க வேண்டும்.
- ஒரு ஏக்கருக்கு 2,000 செடிகள் பதியன்கள் எனப்படும் வேர் பிடித்த குச்சிகள் மூலம் நடுவதற்கு உரிய குழிகள் எடுத்தே நடவு செய்ய வேண்டும்.
- எட்வர்டு ரோஜாவுக்கு தஞ்சாவூர் ரோஜா என்பது மறு பெயர்.
- ஆடிப்பட்டம் நடுவதற்கு இப்போதே நாற்று செடிகள் தயாரித்திட திட்டம் வகுத்தல் மாலை வேலைகளில் ஒன்றரை அடி நீளம், ஒன்றரை அடி அகலம், ஒன்றரை அடி ஆழ குழிகளில் நட்டு பராமரிக்கலாம்.
- சொட்டு நீர்ப்பாசன அமைப்பு மூலம் நீரில் கரையும் உரங்கள் அளித்து ஆண்டு முழுவதும் ஐ.பி.எம். முறைகளை கடைப்பிடித்தால் தரமான பூக்கள் பெறலாம்.
- நட்ட முதல் ஆண்டிலேயே பூத்து பலன் தந்தாலும், ரோஜா இரண்டாம் ஆண்டு முதல் நிலையான மகசூல் தரும். ஒரு ஏக்கரில் ரோஜா பயிரிட 80 ஆயிரம் ரூபாய் செலவு ஏற்படும்.
- எனினும் சராசரியாக 7 டன் ரோஜா மலர்கள் மூலம் மூன்று லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கும்.
தொடர்புக்கு 9842007125 .
– டாக்டர் பா.இளங்கோவன்
வேளாண் துணை இயக்குனர், தேனி.
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்