கிருஷ்ணகிரி வனவியல் விரிவாக்க கோட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு நீண்டகால மரப் பயிர்கள் மற்றும் குறுகிய கால மரப் பயிர் வகைகளும் இலவசமாக வழங்கப்பட உள்ளன.
இதுகுறித்து வனவியல் விரிவாக்கக் கோட்ட அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வனவியல் விரிவாக்க கோட்டத்துக்கு உள்பட்ட கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி, ஊத்தங்கரை ஆகிய வட்டங்களில் உள்ள விவசாயிகளுக்கு நிறைந்த பயன் தரக்கூடிய உயர் ரக மரக் கன்றுகளான தேக்கு, சில்வர் ஓக், மலை வேம்பு, பெருமரம், வேங்கை, குமிழ், வேம்பு, பலா, நாவல், நெல்லி, புளி, சீத்தா போன்ற நீண்ட கால மரப் பயிர்களும், சவுக்கு, தைலம், போன்ற குறுகிய கால மரப் பயிர்களும் இலவசமாக பட்டா நிலங்களில் நடவு செய்து கொடுக்கப்பட உள்ளது.
எனவே, மரம் நடவு செய்ய ஆர்வமுள்ள விவசாயிகள் தங்களது நிலத்திற்கான பட்டா, சிட்டா, குடும்ப அட்டை நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் கிருஷ்ணகிரி வனவியல் விரிவாக்கக் கோட்ட அலுவலகத்தை அணுகி பயன் பெறலாம்.
மேலும், தொடர்புக்கு:
வனவியல் விரிவாக்க அலுவலர் தொலைபேசி எண்: 04343293016,செல்போன்: 09442690086 எண்களில் தொடர்பு கொள்ளலாம்
நன்றி: தினமணி
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்