2 டன் புல்லில் 1 மெகாவாட் மின்சாரம்!

கால்நடை தீவனத்திற்கு பயிரிடப்படும் சி.என்.4 கம்பு நேப்பியர் பயிரை, மின் உற்பத்திக்காக சாகுபடி செய்து வரும் விவசாயி ராஜசேகரன் கூறுகிறார்:

  • திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி பகுதியைச் சேர்ந்தவன் நான். என் நிலத்தில் நீண்ட காலமாகவே விவசாயம் செய்யவில்லை. சில நாட்களுக்கு முன், மண் பரிசோதனை செய்த போது, நிலத்தின் கார அமிலத்தன்மை, பி.எச்., 8 – 8.5 என, இருந்தது. வேளாண் அதிகாரிகள் கூறிய ஆலோசனை படி, பல்வேறு முறைகளில் விவசாயம் செய்தும் பலனில்லை; விவசாயத்தை விட்டு விடலாம் என, எண்ணினேன்.
  • அச்சமயம், செம்பட்டியில் உள்ள விவசாய கழிவுகள் மூலம், மின் உற்பத்தி செய்யும் ஓரியன்ட் கிரீன் பவர் கம்பெனியினர், (Oriental Green Power Company) ‘மாட்டுத் தீவனமான, சி.என்.4 கம்பு நேப்பியர் என்ற புல் வகையை பயிரிட்டால், நன்கு வளரும்; இதை, மின்சாரம் தயாரிப்பதற்கான எரிபொருளாக பயன்படுத்திக் கொள்ளலாம்,’ எனக் கூறினர்.
  • சி.என்.4 கம்பு நேப்பியர் புல் சாகுபடிக்கான விதைக்கரணை, நடவு செலவு, உரம், அறுவடை செலவு எல்லாமே, நிறுவனமே ஏற்றது.
  • வறட்சிக் காலத்தில் எந்த விவசாயமும் செய்ய முடியாத சூழ்நிலையில், வறட்சியையும் தாங்கி, ஓரளவு வளர்ச்சியடைந்து வருமானம் கிடைத்தது.
  • இதற்கு, நிலத்தை நன்றாக உழவு செய்து, கடைசி உழவிற்கு முன் தொழு உரம், சாம்பல் இட்டு உழவு போட்டு, வாய்க்கால் இழுத்து விட வேண்டும்.
  • முக்கால் முதல், 2 அடி வரை நடவு இடைவெளி போதுமானது; அனைத்து சீசனிலும் நடவு செய்யலாம்.
  • அடியுரமாக யூரியா, சூப்பர் பாஸ்பேட், ஒரு ஏக்கருக்கு ஐந்து மூட்டை போடலாம். மேலுரமாக, தண்ணீரில் கரைத்து விடும் உரத்தை நிறுவனமே கொண்டு வந்து கரைத்து விடுகின்றனர்.
  • புல் வெளிர் நிறத்தில் இருந்தால், ‘சிங்க் சல்பேட்’ அடிக்கலாம்.நட்டவுடன் புல் கரணைக்கு, உயிர் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அறுவடை நாட்களுக்குள், நான்கு அல்லது ஐந்து முறை தண்ணீர் பாய்ச்சினால் போதும்.
  • ஆறு மாதங்களுக்கு ஒருமுறை தொடர்ந்து, ஐந்து ஆண்டுகளுக்கு அறுவடை கிடைக்கும். ஒரு அறுவடையில், 15 – 70 டன் வரையில் மகசூல் கிடைக்கும். ஈரப்பதம், 70 சதவீதம் இருந்தால், 110 டன், ஒரு ஏக்கருக்கு மகசூல் வரும். அறுவடையின் போது புல், 45 சதவீதம் ஈரப்பதத்துடன் இருக்க வேண்டும். ஒரு டன், 55 ரூபாய் வரையில் விலை போகும்.
  • சி.என்.4 கம்பு நேப்பியர் புல்லை பாய்லரில் எரித்து, நீராவியாக முதலில் பெறுகின்றனர். இதை, ‘டர்பைன்’ கலத்தில் செலுத்தி, மின்சக்தியாக உருவாக்குகின்றனர். இரண்டு டன் புல்லில் இருந்து, ஒரு மெகாவாட் – ஆயிரம் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.தொடர்புக்கு: 09443505209

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *