மாவில் பழ ஈ தாக்குதல் கட்டுபடுத்துவது எப்படி

மாவில் பழ ஈ தாக்குதலின் அறிகுறிகள்

  • முட்டையிலிருந்து வெளிவரும் புழுக்கள் சதைப்பகுதியை தின்று அழிக்கும்
  • தோலின் மேற்பரப்பில் பழுப்புநிறத்திட்டுக்கள் காணப்படும்
  • சேதம் அதிகமாகும் நிலையில் பழங்கள் அழுகி பழுப்பு நிறத் திரவம் வெளிவரும்
  • சேதமடைந்த பழங்கள் அழுகி கீழே விழுந்துவிடும்

பூச்சியின் விபரம்:

  • புழு – வெண்ணிற புழுக்கள், கால்கள் இல்லாமலும் தலை பகுதி அகன்றும் காணப்படும்
  • பழ ஈ – ஈக்கள் ஆரஞ்சு அல்லது பழுப்பு கலந்த சிவப்பு நிறத்தில் இருக்கும். கண்ணாடி போன்ற இறக்கைகளைக் கொண்டிருக்கும்.

கட்டுப்படுத்தும் முறை:

  • பாதிக்கப்பட்ட பழங்களை பறித்து அகற்றி விட வேண்டும்
  • மரத்தைச் சுற்றி உழவு செய்து பழ ஈயின் கூட்டுப்புழுக்களை அழிக்கலாம்
  • மெத்தில் யூஜீனால் கவர்ச்சிப் பொறியை ஹெக்டேர்க்கு பத்து வீதம் வைத்து பழ ஈக்களை கவர்ந்து அழிக்கலாம்
  • பைரித்ரம் அல்லது பி.எச்.சியை தண்ணீருடன் கலந்து தெளிக்கவும்
  • பென்தியான் 2 மிலி (அ) மாலத்தியான் 2 மிலி மருந்தை 1 லி தண்ணீருடன் கலந்து தெளித்தால் பழ ஈக்களை கட்டுப்படுத்தலாம்
  • ஒப்பியஸ் காட்பன்சேட்டஸ் மற்றும் ஸ்பாலஞ்சியா பிலிப்பைன்ஸ் போன்ற புழு ஒட்டுண்ணிகளைப் பயன்படுத்தி புழு ஈக்களின் தாக்குதலை தடுக்கலாம்

நன்றி: தமிழ் நாடு வேளாண்மை பல்கலைகழகம்

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *