சில மாமரங்களில் நிறைய பூவோடும், சில மரங்களில் பூ குறைவாகவும் இருக்கும். இதுபோல் குறைவாக பூ பூத்து இருக்கும் மரங்களில் அதிகளவில் பூ பூப்பதற்கு சில முறைகளை கையாண்டு பார்க்கலாம்.
வயலுக்கு பயன்படுத்தப்படும் யூரியாவை ஐந்து கிராம் எடுத்து ஒரு லீட்டர் நீரில் கரைத்துக் கொள்ள வேண்டும். ஐந்து கிராமுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. அப்படி அதிகமாக எடுத்துக் கொண்டால் இலை கருகவும் வாய்ப்பு இருக்கிறது.ஆகையால் கவனத்தோடு செயல்படவும்.
இவ்வாறு கரைத்த நீரை தெளிக்கவும். குறிப்பிட்ட காலத்தில் நிறைய பூ பூக்கும்.
ஏற்கனவே பூ பூத்துள்ள மரங்களில் உள்ள பூக்கள் கொட்டாமல் தடுக்கவும் வழி இருக்கிறது. இதற்கு பிளானபிக்ஸ் என்ற மருந்தை வாங்கி 4 மிலி எடுத்து பத்து லிட்டர் நீரில் கலந்து மரம் நனையும் படி தெளிக்கவும். இதன் மூலம் மா பூ கொட்டுதலை தடுக்கலாம்.
உங்களுக்கு பயிர் சார்ந்த சந்தேகம் இருந்தால் உடனே வேளாண் உதவி தொலைபேசி எண்களான 09791278194 என்ற எண்களுக்கு தொடர்பு கொள்ளவும்.
நன்றி: MS சுவாமிநாதன் ஆராய்ச்சி நிலையம்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்