- மா விளைச்சலை அதிகரிக்க மரங்களுக்கு காற்றோட்டமும், சூரிய வெளிச்சமும் கிடைக்க வழி வகை செய்ய வேண்டும்.
- மரங்களில் உள்ள காய்ந்த கிளைகள், பழைய கிளைகள், உயிரற்ற பாகங்கள் ஆகியவற்றை ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் கவாத்து செய்ய வேண்டும்.
- வெட்டிய பாகத்தில் காப்பர் ஆக்ஸிகுளோரைடு தடவ வேண்டும்.
- மழை காலம் துவங்கும் முன், கவாத்து செய்ய வேண்டும்.
- புதுத் தளிர் வரும் எண்ணிக்கையை பொறுத்தே பூக்களின் எண்ணிக்கை அதிகமாகும்.
- பருவமழை துவங்கியுடன் உரங்கள் வைக்க வேண்டும்.
- டிசம்பர், ஜனவரி மாதங்களில் மரங்களை உஷ்ணப்படுத்த வேண்டும்.
- மரம் உஷ்ணப்படுத்தப்படும்போது, பூக்கதிர்கள் உருவாகின்றன.
- இச்சமயத்தில் நனையும் கந்தகம் 2 கிராம் ஒரு லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.
- சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்த, எண்டோசல்பான் இரண்டு மி.லி.,யை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
- பூக்கள் மொட்டாக மாறும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் சைட்டோசைம் டானிக் இரண்டு மில்லி ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
- ஏப்ரல் மாதம் பூக்கள் சிறு பிஞ்சுகளாக மாறும் சமயம் செலின் இரண்டு கிராம் ஒரு லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.
- பூக்களில் தத்துப்பூச்சி இருந்தால், மனோகுரோட்டோபாஸ் இரண்டு மில்லி மற்றும் இரண்டு கிராம் கார்பென்டெசிம் கலந்து தெளித்து தத்துப்பூச்சி, பூஞ்சான நோயைக் கட்டுப்படுத்தலாம்.
- கரையானை கட்டுப்படுத்த குளோர்பைரிபாஸ் ஒரு லிட்டருக்கு இரண்டு மில்லி தெளிக்க வேண்டும்.
இவ்வாறு வேளாண் துணை இயக்குனர் நடராஜன் தெரிவித்துள்ளார்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
2 thoughts on “மா விளைச்சல் அதிகரிக்க வழிகள்”