வயதான மா மரத்தில் பிஞ்சு கருகுதல்

20 வயதான மாமரத்தில் பிஞ்சு அதிகம் பிடித்தாலும் வெம்பி, கருகி பின்னர் கொட்டிவிடுகிறது இதனை எவ்வாறு சரி செய்யலாம்?

  • மாமரத்தினை பொதுவாக செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் கவாத்து செய்து சூரிய ஒளியும் காற்றோட்டமும் படுமாறு செய்ய வேண்டும்.
  • மேலும் 20 வருடமான மரம் என்பதால் உர பற்றாக்குறை இருக்கலாம். எனவே, ஒரு மரத்திற்கு 4 – 5 கிலோகிராம் காம்ப்ளக்ஸ் உரம், குப்பை 50 கிலோ, வேப்பம் பிண்ணாக்கு 3 கிலோ கலந்து மரத்தின் அருகில் குழி எடுத்து தர வேண்டும்.
  • பிஞ்சின் காம்பு கருப்பாக இருந்தால் நோய் உள்ளது என்பது அறிகுறி.
  • அவ்வாறு இருந்தால் Score (10 லிட்டர் தண்ணீருக்கு 6 மில்லி) அல்லது Amister என்ற மருந்தை 15 லிட்டர் தண்ணீருக்கு 6 – 8 கிராம் கலந்து தெளிக்க வேண்டும்.
  • இவ்வாறு செய்தால் பிஞ்சு வெம்பி கருகி உதிர்வதை கட்டுப்படுத்தலாம்

நன்றி: MS சுவாமிநாதன் வேளாண் ஆராய்ச்சி நிறுவனம்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *