மேற்கு தொடர்ச்சி மலைகளிலே தான் தொடர்ச்சியாக (Contiguous) கேரளா தமிழ்நாடு கர்நாடக மாநிலங்களில் காடுகள் உள்ளன இதனால் உலகத்திலேயே அதிக அளவு அடர்த்தியான அளவில் புலி மற்றும் யானைகள் வன விலங்குகள் காண படுகின்றன.
பிள்ளையார், கோயில்களில் யானை, என்று பல விதமான வழிகளில் யானைகள் நம் கலாச்சாரத்தில் ஒரு பெரிய செல்ல பிரியமான இடத்தை பிடித்து கொடுள்ளன. இவற்றை காப்பது நம் கடமை
ஆனால் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த 2 ஆண்டுகளில் 100க்கும் மேற்பட்ட யானைகள் கொன்றழிக்கப்பட்டு, அவற்றின் தந்தங்கள் உள்ளிட்ட உடலின் பிற பாகங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
யானையின் தந்தங்களுக்காகவும், அதன் உடல்பாகங்களில் மருந்துவகைகள் செய்வதற்கும் அவற்றை தொடர்ந்து சமூக விரோதிகள் கொன்று குவித்து வருகிறார்கள். வனத்துறையும், அதன் பாதுகாப்புத் துறை அதிகாரிகளும் இதற்குத் துணை போவதும், கண்டுகொள்ளாமல் இருப்பதும்தான் யானை வேட்டையாடிகளுக்கு சாதகமாகிவிட்டது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
கடந்த 1975 ஆம் ஆண்டிலிருந்து 1985 ஆம் ஆண்டு வரை, சந்தனக்கடத்தல் வீரப்பன் உயிரோடு இருந்த போது, நூற்றுக்கணக்கான காட்டு யானைகள் வேட்டையாடப்பட்டன.
வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு, கடந்த இருபது ஆண்டுகளாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் 400 யானைகளுக்கும் மேல் கொல்லப்பட்டுள்ளன.
சீன மருத்துவத்திற்கு புலிகளும் தந்தத்திற்காக யானைகளும் இப்படி வெட்டி சாய்த்தால் ஒரே தலைமுறையில் நாம் நம் குழந்தைகளுக்கு படங்கள் மூலம் தான் இவற்றை காண்பிக்க முடியும்.
நன்றி:விகடன்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்