சொட்டு நீர் பாசனத்தில் பயிரிட்டுள்ள மிளகாய் அமோகமாக விளைச்சல் கண்டுள்ளதாக விவசாயி தெரிவித்துள்ளார்.விழுப்புரம் அடுத்த பிடாகம் கிராமத்தை சேர்ந்த அறிவழகன்,40. விவசாயியான இவர் தனது நிலத்தில் ஒரு ஏக்கர் பரப்பளவில் சொட்டு நீர் பாசனத்தில் மிளகாய் பயிர் செய்துள்ளார்.
இந்த பயிர் தற்போது அமோகமாக விளைச்சல் கண்டு, அறுவடை செய்யப்பட்டு வருகிறது.இது குறித்து விவசாயி அறிவழகன் கூறியதாவது:
- சொட்டு நீர் பாசனத்தில் கடந்த ஜனவரி மாதம் எனது நிலத்தில் ஒரு ஏக்கர் பரப்பளவில் மிளகாய் பயிர் செய்துள்ளேன்.
- ஒன்பது மாத பயிரான மிளகாய் சாகுபடி செய்வதற்கு கூலி ஆட்கள் மற்றும் உரமிடுவதற்கான செலவு மிககுறைந்தளவே உள்ளது.
- இந்த பயிர் நடவு செய்த 60 நாட்களிலிருந்து அறுவடைக்கு தயாராகும், என்பதால் வாரம் ஒருமுறை பூச்சுகள் தாக்காத அள விற்கு தடுப்பு மருந்துகளை செடியின் மீது தெளிக்க வேண்டும்.தற்போது மார்க்கெட் பகுதிகளில் மிளகாய் விற்பனையின்போது டன் ஒன்றுக்கு 14 ஆயிரம் ரூபாய் கொடுத்து வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர்.
- கடந்த இரண்டு மாதத்தில் இதுவரையில் எனது நிலத்தில் உள்ள மிளகாய் தோட்டத்தில் 4 முறை அறுவடை செய்துள்ளேன். இதில் 12 டன் விற்பனை செய்துள்ளதால் நான் செய்த முதலீட்டை விட அதிகளவு லாபம் ஈட்டியுள்ளேன்.
- சொட்டு நீர் பாசனத்தில் மிளகாய் பயிரிட்டுள்ளதால் மிளகாய் சாகுபடி அதிகமாக கிடைத்துள்ளது.
- தோட்டத்தில் விளையும் மிளகாயை பறித்து விழுப்புரம், புதுச்சேரி, பண்ருட்டி உட்பட பல் வேறு பகுதிகளில் உள்ள மார்க்கெட்டில் விற்பனை செய்து வருகிறேன்.
- சொட்டு நீர் பாசனத்தில் மிளகாய் பயிர் செய்ததில் அதிகம் சாகுபடி மற்றும் லாபம் கிடைத்துள்ளது என்று அறிவழகன் தெரிவித்தார்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
thanks to you sir i am happy