மிளகாய் சாகுபடியில் அதிகளவில் மகசூல்பெற விவசாயிகளுக்கு காஞ்சிபுரம் விதை பரிசோதனை அலுவலர் பெருமாள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
- காஞ்சிபுரம் மாவட்டத்தில் தற்போது சித்திரை பட்டத்தில் காய்கறி சாகுபடிக்கு விவசாயிகள் தயாராகி வருகின்றனர். வீரிய ஒட்டுரக காய்கறி விதைகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
- அதிக விலை கொடுத்து வாங்கும் விதைகள் தரமானதாக உள்ளதா? நல்ல முளைப்புத்திறன் உள்ளதா? என விவசாயிகள் பார்க்கவேண்டும்.
- குறிப்பாக, மிளகாய் சாகுபடி செய்யும் விவசாயிகள் 100 சதவீதம் முளைப்பு திறன் உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
- வீரிய ஒட்டுரக மிளகாய் பயிரினை 2.5 அடி இடைவெளிவிட்டு நடவு செய்தால் ஏக்கருக்கு 8,890 செடிகள் வரை பராமரிக்கலாம்.
- இப்படி செய்தால் 20 சதவீதம் கூடுதல் மகசூல் பெறலாம்.
- மேலும் விவசாயிகள் தங்களது விதைகளை 10 கிராம் மாதிரி எடுத்து விதை பரிசோதனை அலுவலர், விதை பரிசோதனை நிலையம், காஞ்சிபுரம் என்ற முகவரியில் ரூ30 செலுத்தி பரிசோதனை செய்து அதிக மகசூல் பயன்பெறும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என கூறப்பட்டுள்ளது
நன்றி: தினகரன்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்