முருங்கைமரம் பட்டுப்போவதை தடுப்பது எப்படி?

முருங்கை மரங்களில் நோய் பாதிப்பில் இலைகள் உதிர்ந்து, மரம் பட்டுபோவதை தடுக்க பெரியகுளம் தோட்டக்கலைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சிநிலைய பேராசிரியர் சுரேஷ் ஆலோசனை வழங்கி உள்ளார்.

murungai

மாவட்டத்தில் பெரியகுளம், ஆண்டிபட்டி, கடமலைக்குண்டு, கம்பம், போடி பகுதிகளில் பரவலாக முருங்கை சாகுபடி செய்யப்படுகிறது. ஜூன் முதல் செப்டம்பர் வரை சீசன் காலங்களில் தினமும் 70 முதல் நூறு டன் முருங்கை காய்கள் வெளியூர்களுக்கு அனுப்பப்படுகிறது.மாவட்டத்தில் முருங்கை மரங்கள் தேயிலை கொசுவின் தாக்குதலினால், இலைகள் உதிர்ந்து அதிக இடங்களில் பட்ட மரங்களாக காட்சியளிக்கிறது.பெரியகுளம் தோட்டக்கலைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய பூச்சியல்துறை பேராசிரியர் சுரேஷ் மற்றும் ஆய்வுக்குழுவினர் இதை கட்டுப்படுத்தும் முறைகள் கண்டுபிடித்துள்ளனர். பேராசிரியர் சுரேஷ் கூறியதாவது:

  • தேயிலை கொசு சாறு உறிஞ்சும் பூச்சி.
  • இது முருங்கை, தேயிலை, கொட்டைமுந்திரி, கோ கோ, கொய்யா மற்றும் வேப்பமரங்களில் அதிக அளவில் தாக்குகிறது.குறிப்பாக முருங்கையில் இதன் தாக்கம் அதிகம்.
  • நாவாய்பூச்சி இனத்தை சார்ந்தது. உருவத்தில் கொசுவைப் போன்று உள்ளதாலும், தேயிலை செடியில் முதன் முதலில் கண்டறியப்பட்டதால் தேயிலை கொசு என அழைக்கப்படுகிறது.
  • உடல் கருப்பு நிறத்திலும், முதுகு சிகப்பு மற்றும் வயிற்று பகுதி வெள்ளை நிற பட்டையாக காணப்படும். மேலும் முதுகு புறத்தில் மிக நுண்ணிய குண்டு ஊசியை அடித்ததுபோல் இருக்கும். இளம் மற்றும் முதிர்ச்சி அடைந்த தேயிலை கொசுவானது, அதனுடைய ஊசி போன்ற வாய் பகுதியிலிருந்து முருங்கையின் இளம் தளிர்கள், மொட்டுகள் மற்றும் குறுத்துகளில் சாற்றினை உறிஞ்சுகிறது.
  • மேலும் ஒரு வித நச்சு திரவத்தையும் சுரப்பதால், குருத்துக்கள் முற்றிலும் வாடிவிடுகிறது.
  • ஒரு லிட்டர் நீரில் வேப்பஎண்ணெய் 3 சதவீதம் அல்லது வேப்பம்கொட்டை சாறு 5 சதவீதம் தெளித்து தாக்குதலை குறைக்கலாம்.
  • ஊடுருவிப்படியக்கூடிய மருந்து ரகங்களான டைமீத்தோயேட் ஒரு லிட்டருக்கு 2மில்லி, அதே அளவுகளில் புரபனோபாஸ், தயோக்ளோப்ரிட் ஏதேனும் ஒன்றை அடித்து கட்டுப்படுத்தலாம், என்றார்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *