முருங்கை சாகுபடியில் சாதிக்கும் இளைஞர்

வெளிநாட்டு வேலை கனவில் மிதக்கும் இளைஞர்களிடையே, இயற்கை முறை முருங்கை விவசாயத்தில் சாதித்துள்ளார் திண்டுக்கல் பித்தளைப்பட்டி சந்திரகுமார்.

இவர் எம்.எஸ்சி., (பயோடெக்) முடித்ததும், சென்னை தனியார் நிறுவனத்தில் ரூ.10 ஆயிரம் சம்பளத்தில் பணி செய்தார்.

அன்றாட செலவுகளை சமாளிக்க இயலாமல் திணறினார். இதனால், சொந்த நிலத்தில் இயற்கை விவசாயத்தில் ஈடுபடும் எண்ணம் ஏற்பட்டது. ஓராண்டுக்கு முன் அதை செயல்படுத்தினார். இரண்டு ஏக்கரில் 20க்கு 20 என்ற அளவில் 200 முருங்கை கன்றுகளை நட்டார். அவை மரமாகி ஆறு மாதத்தில் காய்களை கொடுத்தன. ஒவ்வொரு மரத்திலும் 100 கிலோ காய்கள் கிடைத்தன. ஒரு கிலோ முருங்கைகாய் ரூ.35க்கு விற்பனையானது. இதனால் 6 மாதத்தில் ரூ.7 லட்சம் வருமானம் கிடைத்தது.

சந்திரகுமார் கூறியதாவது:

Courtesy: Dinamalar
Courtesy: Dinamalar

 

 

 

 

 

 

 

 

தனியார் நிறுவனத்தில் குறைந்த சம்பளத்தில் சிரமப்பட்டேன். படிப்பை விவசாயத்திற்கு பயன்படுத்த முடிவு செய்தேன். களை எடுக்கும் டிராக்டர் மானியத்தில் பெற்றேன். இயற்கை உரங்களை பயன்படுத்தி முருங்கை சாகுபடி செய்தேன். தற்போது அதிக வருமானம் கிடைக்கிறது, என்றார்.இவரை 08695386677 ல் தொடர்பு கொள்ளலாம்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *