மலரே குறிஞ்சி மலரே – உன் நிலைமை என்ன?

12 வருடங்களுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர் தமிழ் கலாச்சாரத்துடன் ஒன்றாக இருப்பது. இதை பற்றி சங்க கால பாட்டுகளிலேயே கூட கூறப்பட்டு உள்ளது.

இந்த ஆண்டு இந்த பூக்கள் போது உள்ளது. டிவி மற்றும் பத்திரிக்கைகளில் இவற்றின் போட்டோ மற்றும் கட்டுரைகள் வந்த வண்ணம் உள்ளன.

சரி இந்த குறுஞ்சி பூக்களின் நிலைமை என்ன என்பதை பற்றி National Geographic நிறுவனம் பெரிய கட்டுரை வெளியிட்டு உள்ளது. அதினின் சாராம்சம்:

  • உலகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டுமே இந்த செடிகள் உள்ளன. (Endemic to Western Ghats)
  • இவற்றின் விஞான பெயர் Strobilanthes kunthianus
  • ஒரு காலத்தில் மேற்கு தொடர்ச்சி மலைகளில் 5000 அடி மேற்பட்ட உயரங்களில் அதிகம் காணப்பட்டது,
  • இப்போது மும்முனை தாக்குதல்களால் இவை குறைந்து வருகின்றன. மடத்தனமாக மலைகளில் வெளிநாட்டு தாவரமான யூகலிபிடஸ் வளர்ப்பது, விவசாயம் மற்றும் புதிதாக வந்துள்ள வில்லனான சுற்றுலா.
  • 12 வருடம் காத்திருந்து இவை போது விதைகளை உருவாக்குகின்றன. அப்போது அங்கே சுற்று சூழல் மாறிவிட்டால் அடுத்த தலைமுறை வராது.
  • குறிஞ்சி தவிர 20 வகையான பூ பூக்கும் தாவரங்கள் மேற்கு தொடர்ச்சி மலைகளில் உள்ள புல்வெளி பரப்புகள் (Grass land) என படும் உயர் மலைகளில் வளரும்  . ஆனால் இந்த புல் இடங்கள் வேகமாக குறைந்து வருகின்றன. கடந்த 40 ஆண்டுகளில் இவை 66% குறைந்து அந்த இடங்களில் யூகலிபிடஸ் போன்ற மரங்கள் அதிகம் வந்துள்ளன.
  • Grasslands
  • அதிலும் கடந்த 20 ஆண்டுகளில் அதிகம் மாற்றங்களை நாம் கொண்டு வந்து உள்ளோம். இந்த மாற்றங்களால் புல்வெளிகள் பரப்புகள் ஒரே இடமாக இல்லாமல் போகின்றன. (Fragmented)
  • இப்போதைக்கு ஏறவிக்குளம் தேசியவன பூங்காவில்  மனிதர்கள் அனுமதி இல்லாதால் அங்கே இவை காணப்படுகின்றன.

இந்த தேசிய பூங்காவில் சுற்றி உள்ள இடங்களையும் காப்பாற்றி மனித நடமாட்டம் நிறுத்தினால் மட்டுமே நம் பேரன்கள் தலைமுறை இவற்றை பார்க்க முடியும் . இல்லாவிட்டால் அழிந்து போன டோடோ மிருகத்தை படங்களில் பார்த்து கொள்வது போன்று பார்த்து கொள்ள வேண்டியது தான்.

 

 

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *