வசம்பு சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

மருத்துவத்திற்கு பயன் படக்கூடிய வசம்பு சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

  • கள்ளக்குறிச்சி பகுதியில் மருத்துவத்திற்கு பயன்படக்கூடிய கோலியாஸ் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. மற்றொரு பயிரான வசம்பும் சாகுபடி செய்யப்படுகிறது.
  • வசம்பிற்கு பிள்ளை வளர்த்தி என்று மற்றொரு பெயரும் உள்ளது. ஓராண்டு பயிரான இதன் வேர் மற்றும் தண்டு பகுதிகள் மருத்துவத்திற்கு பயன்படுகிறது.
  • மருத்துவ குணத்திற்கு பயன்படும் வசம்பு, சேலம் மாவட்டம் ஆத்தூர், தம்மம்பட்டி, எடைபாடி பகுதியில் மட்டுமே அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது.
  • தற்போது, கல்வராயன்மலை அடிவாரத்தில் உள்ள விவசாய நிலங்களிலும் வசம்பு சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகினறனர்.
  • நெல்லுக்கு நாற்று விடுவது போல் வசம்புக்கும் நாற்று விட்டு சாகுபடி செய்கின்றனர்.
  • சாகுபடிக்கு பின்பு நிலத்தில் தண்ணீர் எப்போதும் இருக்க வேண்டும்.
  • அறுவடை காலங்களில் ஆந்திரா மாநிலம் ஐதராபாத் பகுதி நிறுவனத்தினர் நேரடியாக வந்து விவசாயிகளிடம் கொள்முதல் செய்கின்றனர்.
  • தண்ணீர் வசதி உள்ள கல்வராயன்மலை அடிவார பகுதியான மட்டப்பாறை, மாத்தூர் உள்ளிட்ட பல பகுதியில் வசம்பு சாகுபடி செய்யப்படுகிறது.
  • மருத்துவ குணத்திற்கு பயன்படும் வசம்பு லாபம் தருவதால் சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

நன்றி: தினமலர் 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *