மொந்தன் ரக கறிவாழை

மொந்தன் ரக கறி வாழை சாகுபடி பற்றி அனுபவங்களை திருவண்ணாமலை மாவட்டம் பண்ணைக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை தெரிவிப்பது:

  • அனைத்து பட்டங்களிலும் சாகுபடி செய்யலாம்.
  • நிலத்தில் வடிகால் வசதி அவசியம். நிலத்தை நன்கு உழுது மண்ணைப் பொலபொலப்பாக மாற்றி, செடிக்கு செடி, வரிசைக்கு வரிசை ஏழரை அடி இடைவெளியில் ஒன்றரை அடி ஆழம், அகலம் குழிகள் எடுத்து 1 வாரம் வரை ஆறப்போட்டு 5 கிலோ தொழு உரத்துடன் மேல் மண்ணைக்கலந்து குழியை நிரப்ப வேண்டும்.
  • பின்னர் பாசனம் செய்து, 2 மாத வயதுள்ள கன்றுகளை குழிகளில் நடவு செய்ய வேண்டும்.
  • நடவு செய்த 3ம் நாள் உயிர்த்தண்ணீரும் பின் வாரம் ஒரு தண்ணீரும் கொடுத்தால் போதுமானது.
  • 30ம் நாள் இடைஉழவு செய்து, களை நீக்கம் செய்து, 90ம் நாள் 1 டன் மண்புழு உரத்துடன் 50 கிலோ காம்ப்ளக்ஸ், 25 கிலோ பொட்டாஷ், 25 கிலோ வேப்பம் புண்ணாக்கு ஆகியவற்றை கலந்து மரத்துக்கு ஐந்தரை கிலோ வீதம் வைத்து மண் அணைத்து விட வேண்டும்.
  • நடவு செய்த 7 மாதத்தில் குலை தள்ள ஆரம்பிக்கும். 9-12 மாதங்களில் அறுவடை செய்யலாம். 25 சென்டுக்கு செலவு போக நிகர லாபம் ரூ.18,000 கிடைத்துள்ளது. தொடர்புக்கு: அண்ணாமலை, 08973093432)

டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *