வாழைத்தார் அறுவடை உத்திகள்

விருதுநகர் மாவட்டத்தில் பரவலாக வாழை பயிரிடப்பட்டு அறுவடை செய்யப்படுகிறது. வாழைக்காய்/ பழத்தின் விலை காய்களின் முதிர்ச்சி, பழத்தின் நிறம் இவைகளைப்பொறுத்தே அமைகிறது. முதிர்ச்சியடைந்த திரட்சியான காய்கள் நல்ல விலைக்கு விற்பதற்கு, அதன் தரம் சிறந்துவிளங்க, கீழ்க்கண்ட, அறுவடைக்குப்பின் செய்நேர்த்தி முறைகளை விவசாயிகள் கடைபிடிக்க வேளாண் வணிகதுணை இயக்குநர் முத்துமுனியாண்டி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 •  வாழை பொதுவாக காயாக உபகோயப்படுத்தினாலும் அல்லது பழத்திற்காக உபயோகப்படுத்தப்பட்டாலும் முதிர்ச்சியமடைந்த பின்பே, அதன் குலைகளை அறுவடை செய்யவேண்டும்.
 • வாழைத்தாார்கள் அறுவடை செய்யும் காய்கள் நன்கு திரட்சியடைந்து 80 முதல் 90 சதவீதம் வரை முதிர்ச்சியடைந்திருக்க வேண்டும்.
 • தார்களை அறுவடை செய்து நீண்ட தூரம் அனுப்பவேண்டியிருந்தால் 75 சதவீத முதிர்ச்சியில் அறுவடை செய்ய வேண்டும்.
 • வாழைத்தார்களை அறுவடை செய்ய உரிய உத்திகளைக்கையாண்டு முதல் சீப்பிலிருந்து இடைவெளிவிட்டு குலைக்காம்பு மரத்திலிருந்து வளையும் இடத்தில் அறுத்து எடுக்க வேண்டும்.
 • அறுவடையின்போது காய்களின் மீது வெட்டுப்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
 • தார்களைபோதிய அளவு வாழை மட்டைகளை ஒவ்வொரு அட்டிகளுக்கும் இடையில் பரப்பி காய்கள் அடிபட்டு சேதம் அடையாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும்.
 • பொதுவாக காய்கள் அடிபடாத வகையில் மிகவும் பாதுகாப்பாக கையாள்தல் மற்றும் எடுத்துச்செல்ல வேண்டும்.
 • தார்களை வாழைச் சருகுகளால் மூடி கட்டுதல்(கோட்டை கட்டுதல்) மிகவும் சிறந்த முறையாகும்.
 • வாழைக்குலைகள் பழுக்க வைக்க கையாளும் முறையை தங்களின் அருகிலுள்ள சந்தையைச் சார்ந்த ஊரிலேயே கையாளப்பட வேண்டும்.
 • வாழைக்காய்களைள வெளியூர் சந்தைகளுக்கு அனுப்புவதற்கு தார்களில் சீப்புகளாக காய்கள் சேதமடையாமல் வெட்டி எடுத்து “பிளாஸ்டிக் கிரேட்’களில் வைத்து அனுப்பலாம். இதனால், சேதாரம் தவிர்க்கப்படும்.
 • காய்களை பழுக்க வைப்பதற்கு எத்திலீன்வாயு வணிக ரீதியான 200 பிபிஎம் பயன்படுத்துவது மிகவும் நல்லது. இம்முறையில் காய்கள் முழுவதும் ஒரே நேரத்தில் வெளிர் மஞ்சள் நிறமடைகின்றன. இதனால், காய்கள் ஒரே சீராக பழுக்கும்.
 • விற்பனைக்கு காலதாமதம் ஆகும் பட்சத்தில் அறுவடை செய்த தார்களை இருப்பு வைக்கும் அறைகளின் வெப்பநிலையைக்குறைக்க, ஈரச்சாக்குகளை அறைகளின் சுவர் ஓரங்களில் தொங்கவிடலாம். கீற்றுக்கொட்டகையில் சேமித்து வைக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நன்றி: தினமலர் 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *