வாழையில் ஊடுபயிராக தக்காளி

  • ரிஷிவந்தியம் அடுத்த கடம்பூர் பகுதியை சேர்ந்தவர்களில் பெரும்பாலானவர்கள் விவசாயிகள். இப்பகுதியில் அதிகளவில் நெல், கரும்பு, சோளம் உள்ளிட்ட பயிர் களை சாகுபடி செய்கின்றனர்.
  • தற்போது போதிய நீரில்லாததால், இப்பகுதி விவசாயிகள் குறைந்த நீரில் அதிக விளைச்சல் தரக்கூடிய வெங்காயம், கத்தரி, தக்காளி, வாழை சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
  • குறிப்பாக சொட்டுநீர் பாசனமுறையில் பயிர் செய்யப்படும் வாழை அதிக விளைச்சல் கொடுக்கிறது.
  • மேலும் இதனுடன் ஊடுபயிராக தக்காளியை பயிர் செய்வதால் அதிக லாபம் கிடைப்பதாக இப்பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
  • வாழை இலையை திருக்கோவிலூர், சங்கராபுரத்தை சேர்ந்த வணிகர்கள் நேரில் தோட்டத்திற்கு வந்து வாங்கி செல்கின்றனர். இதனால் போக்குவரத்து செலவு, நேரம் குறைவதுடன், 3 மடங்கு லாபம் கிடைகிறது

நன்றி: தினகரன்

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *