வாழையை தாக்கும் நோயை கட்டுப்படுத்த..

“கூடலூர், பந்தலூர் பகுதிகளில் வாழையை தாக்கும் நோயை கட்டுப்படுத்த, “பஞ்சகாவ்யா, தசக்காவ்யா’ மருந்தை பயன்படுத்த வேண்டும்’ என, தோட்டக்கலை துறை அறிவுறுத்தி உள்ளது.

கூடலூர் தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

  • சமீபத்தில் எதிர்பாராத வகையில் காற்றுடன் பெய்த மழையில் வாழை பாதிக்கப்பட்டுள்ளது.
  • தற்போது, வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்பதால், நோய் பரவும் அபாயமும் உள்ளது.
  • இதனை கட்டுப்படுத்த இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட “பஞ்சகாவ்யா மற்றும் தசகாவ்யா‘ ஆகியவற்றை தனித்தனியாக, 300 மில்லி லிட்டர் அளவில், 10 லிட்டர் தண்ணீருடன் கலந்து, 15 நாட்கள் இடைவெளி விட்டு தெளிக்க வேண்டும்.
  • முதலில், தசகாவ்யா மருந்தையும், 15 நாட்கள் இடைவெளி விட்டு, பஞ்சக்கவ்யா மருந்தையும் தெளிக்க வேண்டும்.
  • விவசாயிகளுக்கு தேவையான, பஞ்சகாவ்யா, தசக்காவ்யா மருந்துகள், தேவாலா பண்ணையில் வினியோகிக்கப்படுகிறது.
  • பஞ்சகாவ்யா லிட்டர் 90 ரூபாய்க்கும், தசக்காவ்யா லிட்டர் 100 ரூபாய்க்கும் கிடைக்கும்.
  • மேலும், விபரங்களுக்கு கூடலூர் தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *