வாழை மகசூல் பெருக “வாழை சக்தி”

தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனம் (National Research Center for Banana – NRCB) திருச்சி அருகே உள்ள தயனுர் என்ற ஊரில் உள்ளது. இது, Indian Council of Agricultural Research நிறுவனத்தின் ஒரு பிரிவாகும்.

இந்த நிறுவனம், வாழைக்கு என நுண் சத்துக்கள் கொண்ட தாவர வளர்ச்சி ஊக்கி ஒன்றை கண்டு பிடுத்து உள்ளது. இதற்கு, “வாழை சக்தி” என்று பெயர். இந்த தாவர வளர்ச்சி ஊக்கியில் ஜின்க், இரும்பு, போரோன், செம்பு போன்ற தாதுக்கள் மட்டும் அல்லாமல், மற்ற Micronutrients நிறைந்துள்ளன.

இதை, வாழை மரத்தின் இலைகளில் நான்காவது மற்றும் ஐந்தாவது மாதங்களில் தெளிக்க வேண்டும்.

ரசாயன உரங்களை அதிகமாக இட்டு இட்டு, மண்ணின் நலம் கெட்டு விட்டது என்றும், இப்படி பட்ட தாவர வளர்ச்சி ஊக்கிமூலம், மீண்டும் மண் வளம் பெருகும் என்றும் இந்த நிறுவனத்தின் தலைவரான திரு முஸ்தப்பா தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு அணுகுவீர்:

தேசிய வாழை ஆராய்ச்சி நிலையம், தோகமலை சாலை, தயனுர் போஸ்ட், திருச்சி – 620 102.

தொலைபேசி எண்கள்: 04312618104 மற்றும் 04312618106

நன்றி: ஹிந்து நாளிதழ்

வாழை பற்றிய மற்ற இடவுகளை இங்கே படிக்கலாம்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *