கும்பாபிேஷகத்தின் போது கோபுரகலசங்களில் கட்டப்படும் நவதானியங்கள் பல நுாறு ஆண்டுகளுக்கு முன் இருப்பு விதைகளாக பயன்படுத்தப்பட்டது என வேளாண்மைத்துறை உதவி இயக்குனர் செல்வராஜ் கூறினார்.
கோவில் கும்பாபிேஷகத்தின் போது நவதானியங்கள் (ஒன்பது வகை தானியங்கள்) உள்ள முடிப் புகளை கோவிலில் உள்ள கோபுர கலசங்களில் கட்டி வைப்பது மிக முக்கிய சடங்காகும்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய வழக்கம் இன்றும் நடை முறையில் உள்ளது.
பல தலைமுறைகளை கடந்த பின்பும் உள்ள இந்த பாரம்பரிய வழக்கம் குறித்து மடத்துக்குளம் வேளாண்மைத்துறை உதவி இயக்குனர் செல்வராஜ் கூறியதாவது:
- கோவில்களில் கோபுரங்கள் அமைத்து வழிபட தொடங்கிய காலங்களில், பத்து அடிக்கும் அதிகமான உயரங்களில் சாதாரண மக்களின் வீடுகள் இல்லை.
- மண் சுவர்கள் அமைக்கப்பட்ட பனை மற்றும் தென்னை ஓலைகளை மேற்கூரைகளாக பயன்படுத்தினர்.
- மன்னர் மற் றும் அவருக்கு இணையாக உள்ளவர்கள் மட்டுமே மரம் மற்றும் சுண்ணாம்புகாரையால் ஆன மேற் கூரைகளை அமைத்துக் கொள்ளலாம்.
- இந்த காலகட்டத்தில் விவசாயம் மட்டுமே மிக முக்கிய தொழிலாக இருந்தது.
- அடிப்படை கட்டமைப்பு மற்றும் நீர் தேக்க வசதிகள் இல்லாத இந்த காலங்களில் பல கிராமங்கள் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டுள்ளன.
- வெள்ளத்தாக்குதலுக்குபின் பலியானவர்கள் போக மீத முள்ளவர்கள் மீண்டு வந்தாலும், அவர்களின் உணவு தேவைக்கு விவசாயம் செய்ய வேண்டும்.
- விவசாயம் செய்ய விதைகள் தேவை.
- அப்படி தேவைப்படும் விதைகளை வெள்ளத்திலிருந்து பாதுகாக்க ஒவ்வொரு வகை விதையையும் மூன்று முதல் ஐந்து கிலோ அளவில் துணியில் கட்டி ஒன்பது வகை விதைகளை (ராகி,கம்பு,சோளம்,நெல், சாமை, திணை, தட்டைப்பயிறு, பாசிபயறு, துவரை) கோபுரங்களிலுள்ள கலசங்களில் கட்டி வைத்தனர்.
- மூன்று கிலோ நெல் ஒரு ஏக்கர் விளைச்சல் வழங்கும்.
- இந்த அடிப்படையில் கணக்கீடு செய்தால் 27 முதல் 30 ஏக்கருக்கு தேவையான விதைகளை நமது முன்னோர்கள் அனைத்து காலகட்டங்களிலும் கோவில்களில் வைத்து காத்துள்ளனர்.
- தற்போது இந்த நவதானியங்கள் மிக குறைந்த அளவில் வழக் கத்துக்காக (பார்மாலிட்டி) கட்டப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்