நீடாமங்கலம் வேளாண் மையத்தில் விதைநெல் விற்பனை

நீடாமங்கலம் வேளாண் மை அறிவியல் நிலையத்தில் விதைநெல் விற்பனைக்கு உள்ளதாக நிலைய தலைவர் சோழன் தெரிவித்துள்ளார்.

  • திருவாருர் மாவட்டம் நீடாமங்கலம் வேளாண் மை அறிவியல் நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் சோழன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
  • நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நடப்பாண்டு காவிரி டெல்டா  பகுதிகளில் சம்பா சாகுபடிக்கேற்ற நெல் விதைகள் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
  • விதை தேவையுள்ள விவசாயிகள் நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தை தொடர்பு கொள்ளலாம்.
  • சி.ஆர்.1009, மற்றும் டி.ஆர்.ஒய்&3 கிலோ ஒன்று ரூ.19க்கும், ஏ.டி.டி&46, ஏ.டி.டி&19 மற்றும் ஏ.டி.டி&50 ரக விதைகள் கிலோ ஒன்றுக்கு ரு.22 வீதம் விற்கப்படுகிறது.
  • விவசாயிகள் தங்களுக்கு தேவையான விதைகளை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
  • தொடர்பு எண்: 09443847067 

நன்றி: தினகரன்

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *