பாரம்பரிய நெல் விதை நேர்த்தி

நெல் விவசாயி எ.எஸ். தர்மராஜன் நெல் விவசாயத்தில் பாரம்பரிய முறைகளை அனுசரிப்பதில் மிகுந்த அக்கறை உள்ளவர்.

தற்போது நெல் விதை நேர்த்தியை செய்வதில் மிகவும் ஆர்வம் உள்ளவராக இருக்கின்றார். இவர் பல நெல் ரகங்களை சாகுபடி செய்து பயன் அடைந்து விவசாயிகளுக்கு சிபாரிசு செய்துள்ளார்.

அவர் விதை நேர்த்தியில் தனக்குத் தெரிந்த விஞ்ஞானத்தை விளக்கு கிறார். அதோடு அமாவாசை வேளையில் நெல் விதைப்பினை எப்படி செய்யலாம் என்று யோசனைகள் தெரிவிக்கின்றார்.

பாரம்பரிய நெல் விதை நேர்த்தி

 • 30 கிலோ நெல் விதையை ஒரு பாத்திரம் அல்லது டிரம்மில் 18 மணி நேரத்திற்கு ஊறவிட வேண்டும்.
 • அதன் பிறகு ஒரு சாக்கை எடுத்து ஒரு கிலோ வீதம் வாதநாராயணன் மற்றும் குப்பைமேனி இலைகளை சாக்கின் அடியில் பரப்பவும்.
 • இந்த அடுக்கின் மேல் காய்ந்த பசுமாட்டு சாணத்தை பரப்பவும்.
 • ஊறவைத்த நெல்லை இதன்மேல் கொட்டவும்.
 • சாக்கில் நான்கில் மூன்று பகுதி அளவு வரை நெல்லை நிரப்பி, இந்த நெல் விதைகளுக்கு மேல் மீண்டும் காய்ந்த சாணத்தை வைக்க வேண் டும்.
 • இதற்கு மேல் மீண்டும் ஒரு முறை ஏற்கனவே சாக்கின் அடிப் பகுதியில்இட்டதுபோலஒருகிலோ வீதம் வாதநாராயணன் மற்றும் குப்பைமேனி இலைகளை பரப்ப வேண்டும்.
 • அதன்பிறகு சாக்கை மூடி கயிற்றில் கட்டி பாரம் வைத்து 24 மணி நேரம் அப்படியே வைத்து இருக்க வேண்டும்.
 • அதன்பிறகு சாக்கை அவிழ்த்து முளை விட்டிருக்கும் நெல் விதைகளை எடுத்து நமது தேவைக்கு ஏற்றவாறு நாற்றங்காலில் விதைக்கலாம்.
 • விதைக்கப்பட்ட நெல்லைவிட நெல் விதைகள் விரைவாக, அதிகமாக முளைப்பது மட்டுமன்றி செம்புள்ளி நோயை எதிர்த்து வளரும் திறனுடையதாகவும் அமைகிறது.
 • மேலும் இம்முறைப்படி விதைநேர்த்தி செய்யப் பட்ட நெல் பயிரிலிருந்து அதிக அளவு நெல்மணிகள் கிடைக்கின் றன.
 • இவ்விதைநேர்த்தி செய்யப் பட்ட நெல் பயிரிலிருந்தும் இம்முறை விதைநேர்த்தி செய்யப்படாத வெள்ளைப் பொன்னி நெற்பயிரிலிருந்தும் கிடைத்த நெல்மணிகளை ஆய்வு செய்ததில் இம் முறைப்படி விதைநேர்த்தி செய்யப் பட்ட நெற்கதிரில் 250க்கு மேல் நெல்மணிகள் உண்டாகி இருந்தது. பொதுவாக வெள்ளைப்பொன்னியில் ஒரு கதிரில் 145 நெல் மணிகள் மட்டுமே பிடித்திருக்கும்.
 •  அமாவாசைக்கு 48 மணி நேரம் முன்பு விதைப்பு செய்தல் மிகவும் முக்கியமானது.
 • பூமிக்கு அருகில் உள்ள நிலா நாள் விதைப்பதைத் தவிர்க்க வேண்டும். பூமிக்குத் தொலைவில் உள்ள நிலா நாள் விதைப்பது மிகவும் நல்லது.

 

நன்றி: தினமலர் 

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “பாரம்பரிய நெல் விதை நேர்த்தி

 1. பாஷ்யம் மல்லன் says:

  அன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம்,

  உங்கள் விவசாய இணையத்தளம் சேவையை நான் மதிக்கிறேன்.
  இது விவசாயிகளுக்கு மிகவும் உதவும்
  தயவுசெய்து காய்கறிகள், அரிசி, மற்றும் அனைத்து இதர பயிர்கள் நடும் புதிய தொழில்நுட்பங்களுக்கு இணைப்பு கொடுங்கள் அல்லது எழுதவும்
  புதிய தொழில்நுட்பங்களுடன் பயிர்களை பராமரித்தல்
  புதிய தொழில்நுட்பங்கள், இயந்திரங்கள் போன்றவற்றை கொண்டு சாகுபடி, மற்றும் இடைத்தரகர்கள் தவிர்ப்பதற்கு வாங்குபவர்கள் பற்றிய விவரங்கள் கொடுங்கள்.
  தயவுசெய்து என் தமிழ் எழுத்துக்களில் எழுத்துப்பிழை இருந்தால் என்னை மன்னிக்க வேண்டும்
  நன்றி மற்றும் அன்புடன்
  பாஷ்யம் மல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *